Airtel ரீசார்ஜ் கட்டணங்கள் எல்லாம் உயரப்போகுது.. இனி இந்த 3 திட்டங்களை விட்றாதீங்க.. ஏன்?
ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது. அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.118 மற்றும் ரூ.289 திட்டங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ரூ.118 க்கு ரீசார்ஜ் செய்யக் கிடைத்த திட்டம் இனி ரூ.129 க்கும் ரீசார்ஜ் செய்யக் கிடைக்கும். இதே போல ரூ.289 திட்டமானது இனி ரூ.329 க்கு ரீசார்ஜ் செய்யக் கிடைக்கும். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் மீண்டும் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது வரும் லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டண உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஏர்டெல் பயனர்கள் இப்போதே நீண்ட நாள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது. இப்போது நீண்ட நாள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3359 ப்ரீபெயட் திட்டம் (airtel rs 3359 plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா கொடுக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 912.5ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
குறிப்பாக ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம் 1 வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகிறது.. மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle மெம்பர்ஷிப் போன்ற நன்மைகளையும் வழங்கும் இந்த திட்டம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 2999 Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 முடிிள ஆகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனாலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மெம்பர்ஷிப், விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அன்லிமிடெட் 5ஜி உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

ஏர்டெல் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1799 Recharge Plan): ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஆனாலும் இத்திட்டம் வெறும் 24ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஏர்டெல் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 3600 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த ஏர்டெல் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் லம்ப்-சம் டேட்டா (Lump Sum Data) கொடுக்கப்படுகிறது. வேலிடிட்டி நாட்களில் எப்போதும் வேண்டுமானாலும் இதன் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இதில் Airtel Thanks நன்மைகளாக அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle), ப்ரீ-ஹலோ டியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) போன்ற இலவச நன்மைகளும் பயன்படுத்தக் கிடைக்கும். ஒரு வருடம் முழுக்க வாய்ஸ் கால்ஸ் மட்டும் எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இது சூப்பர் திட்டம்.


Click it and Unblock the Notifications








