Home
News

Amazon Prime சந்தாவுக்கு தனியாக செலவு வேண்டாம்.. இனி இந்த Airtel திட்டங்கள் போதும்.. என்ன விலை?

ஏர்டெல் நிறுவனம் தற்போது ஓடிடி (OTT) சந்தா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை அதிகளவில் அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் இந்த வகை திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டுவதால், நிறுவனம் தனது சேவைகளை அதற்கேற்ப விரிவுபடுத்தி வருகிறது. திரைப்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் விளையாட்டு நேரலைகள் போன்ற பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை ஒரே ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் பெற முடிவது வாடிக்கையாளர்களைப் பெரிதும் கவர்கிறது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் இரண்டு சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Amazon Prime சந்தாவுக்கு தனியாக செலவு வேண்டாம்..

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 838 prepaid Plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. Fwpg;ghfஇந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். குறிப்பாக நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா (Amazon Prime Lite Subscription) கிடைக்கும். இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது.

அதுவும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 20க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.

ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1199 prepaid plan) 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. நீங்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா (amazon prime lite subscription) வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

Amazon Prime சந்தாவுக்கு தனியாக செலவு வேண்டாம்..

குறிப்பாக இந்த ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே போன்ற 20-க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தா கிடைக்கிறது. ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) சந்தா இதில் கிடைக்கும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், rewards mini subscription, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel Plans Offering Free Amazon Prime Subscription, Unlimited Calling and Data Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X