ஒரே ஏர்டெல் ரீசார்ஜ் 84 நாட்களுக்கு கவலையே இருக்காது.. OTT.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..
ஏர்டெல் (Airtel) நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி, ஓடிடி மற்றும் அதிக டேட்டா நன்மைகளைத் தரும் ஏர்டெல் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக இதன் மூலம் 22 ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும்.

அதுவும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பெறமுடியும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1199 prepaid plan) ஆனது மொத்தம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். ஆகவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), rewards mini subscription, ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1798 prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஏர்டெல்லின் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். ஓடிடி நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். அதாவது இந்த திட்டத்தில் பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா வழங்கப்படுகிறது.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம். இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் திட்டத்தில் கிடைக்கிறது.
அதன்படி ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications