ஜியோ மீட் செயலிக்கு போட்டியாக விரைவில் புதிய செயலியை களமிறக்கும் ஏர்டெல்.!

|

வீடியோ கான்பரன்சிங் செயலியின் முக்கியத்துவத்தை கொரோனா தாக்கம் முன்பு பின்பு என பிரிக்கும் வகையில் தற்போதைய காலக்கட்டத்தில் வீடியோகால் என்பது பிரதான தேவையாக இருந்து வருகிறது.

யூசி பிரவுசர், ஹலோ ஆப்

டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்தது. பின்பு இதனை தொடர்ந்து ஜியோ நிறுவனம் தனது ஜியோமீட் என்ற பெயரில் வீடியோ கான்பரன்சிங் செயலியை அறிமுகம் செய்தது.தற்சமயம் வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் போட்டியில் சேர திட்டமிட்டுள்ளது, அதற்கான திட்டங்களில் அது செயல்பட்டு வருகிறது.

முதலில் ஒரு சில நிறுவனங்களுக்கு தனது வீடியோ கான்பரன்சிங்

ஏர்டெல் நிறுவனம் முதலில் ஒரு சில நிறுவனங்களுக்கு தனது வீடியோ கான்பரன்சிங் சேவைகளை வழங்க வாய்ப்புள்ளது, பின்னர்
இது அனைவருக்கும் கிடைக்கும்படி வழங்கும் என தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் கொண்டுவரும்செயலி பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BSNL ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்து 4% தள்ளுபடியை பெறுவது எப்படி?BSNL ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்து 4% தள்ளுபடியை பெறுவது எப்படி?

ஜூம் மீட், பயன்படுத்திய 5

சீனா செயலியான ஜூம் மீட், பயன்படுத்திய 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல என்றும் இதனை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது. அதேபோல் ஜூம் செயலி குறித்து பல்வேறு புகார்களும்
எழுந்தன.

 தற்போது ரிலையன்ஸ்

இதற்கு சிறந்த மாற்றாக தற்போது ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ மீட் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இந்த அறிமுகமானது ஜூம் மீட் மற்றும் கூகுள் மீட் சேவைக்கு இணையான சிறந்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

களமிறக்கி இருக்கிறது.

ஜியோ மீட் சேவையானது வியாழக்கிழமை சிறதளவு பயனர்களுடன் அறிமுகப்படுத்தியது. இந்த ஜியோ மீட் செயலி கூகுள் ப்ளே
ஸ்டோரில் கிடைக்கின்றன. ரிலையன்ஸ் ஜியோ தங்களது இந்த பயன்பாட்டை பிற செயலிக்கு நேரடி போட்டியாக களமிறக்கி இருக்கிறது.
இந்த புதிய ஜியோமீட் பிரத்யேக சேவை குறித்து பார்க்கலாம்.

ட்ரூகாலரில் இருந்து உங்கள் போன் நம்பரை டெலிட் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!ட்ரூகாலரில் இருந்து உங்கள் போன் நம்பரை டெலிட் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!

 வீடியோ கான்பரன்சிங் அழைப்புகளை ஒரே நேரத்தில் 100

ஜியோ மீட் சேவையில் வீடியோ கான்பரன்சிங் அழைப்புகளை ஒரே நேரத்தில் 100 பங்கேற்பாளர்களை கொண்டிருக்கிறது. இந்த
மீட்டிங்கானது தொலைபேசி எண் அல்லது மெயில் ஐடி மூலம் இணைக்கலாம். இந்த வீடியோ செயலியானது இலவசமாக பயனர்களுக்கு
வழங்கப்படுகிறது அதோடு இது ஹெச்டி தர வீடியோ கால் சேவையை ஆதரிக்கிறது.

யன்படுத்தி ஒரு நாளுக்கு

ஜியோ மீட் சேவையை பயன்படுத்தி ஒரு நாளுக்கு வரம்பற்ற வீடியோ காலிங் சேவையை பயன்படுத்தலாம். இந்த செயலி ஐந்து சாதனங்கள் வரையிலான மல்டி டிவைஸ் லாக்-இன் ஆதரவை வழங்குகிறது. ஜியோமீட் இந்திய செயலி என்பதால் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு இருக்காது என்றே கருதப்படுகிறது. இந்த செயலியில் பிரத்யேகமான safe driving mode உள்ளிட்ட அம்சமும், ஸ்கிரீன் ஷேரிங் அம்சமும் வழங்கப்படுகிறது. இந்த செயலியானது கண்டிப்பாக இந்தியாவில் பெரும் வரவேற்பு அடையும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Planning to Launch Video Conferencing Application Soo: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X