Airtel சிம் கார்டுக்கு டாட்டா.. மீண்டும் விலை உயரும் ரீசார்ஜ் கட்டணங்கள்! எப்போது? கோபால் விட்டல் திட்டவட்டம்!
ஏர்டெல் (Airtel) நிறுவனமானது ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன் ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை முதல் 10 - 21 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்ததையே இன்னும் பலரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இதற்கிடையில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் எம்டி ஆன கோபால் மிட்டல் அடுத்த விலை உயர்வை குறித்து திட்டவட்டமாக பேசி உள்ளார்.
ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் குறித்து பேசிய பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கோபால் விட்டல், ஏர்டெல் நிறுவனமானது நெட்வொர்க்கில் முதலீட்டை குறைத்து வருகிறது, ஆனால் டிரான்ஸ்மிஷன் திறனை உருவாக்குதல், நுகர்வோர் அனுபவத்தில் இடைவெளியை குறைத்தல் மற்றும் ஹோம் பிராட்பேண்ட் சேவைகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்று கூறினார்.

இதோடு சேர்த்து தொழில் நிதி ரீதியாக ஸ்திரமாக இருப்பதற்கும், நிலையான அடிப்படையில் நியாயமான வருமானத்தை வழங்குவதற்கும் இன்னும் சிறிது கட்டண திருத்தும் தேவைப்படுகிறது என்றும் கோபால் விட்டல் கூறினார். அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டங்களின் விலைகள் மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். ஆனால் இது எப்போது, எவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்பது பற்றி அவர் எதுவும் பேசவில்லை.
ஏஆர்பியு (ARPU) விஷயத்தில், அதாவது ஒரு பயனருக்கான சராசரி வருவாய் விஷயத்தில், இந்தியாவானது உலகளவில் மிகக் குறைந்த நிலையில் உள்ளது என்பதையும் அவர் அடிக்கோடிட்டு காட்டினார் மேலும், ஏர்டெல் அதன் உலகளாவிய வணிகப் பிரிவின் ஒரு பகுதியாக இருக்கும் வோல்சேல் வாய்ஸ் மற்றும் மெசேஜிங் வணிகத்திலிருந்து விரைவில் வெளியேறும் என்று கோபால் விட்டல் அறிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டிற்கான ஏர்டெல் நிறுவனத்தின் கேபெக்ஸ் ஆனது FY24-ஐ விட குறைவாக இருக்கும் என்று நம்புவதாகவும், மேலும் இது FY26 இல் தொடர்ந்து அன்விண்ட்ஆகுமென்றும் விட்டல் கூறியுள்ளார். டிஜிட்டல் திறன்களை உருவாக்குவதற்கான ஏர்டெல் நிறுவனத்தின் முதலீட்டு அணுகுமுறை இப்போது பலனளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய கஸ்டமர்களை ஈர்க்க ஏர்டெல் நிறுவனம் தொடர்ச்சியாக பல வேலைகளை பார்த்து வருகிறது. அதிலொன்று தான் - ஏர்டெல் போஸ்ட்பெய்ட் சேவையின் கீழ் கிடைக்கும் ப்ளூ ரிப்பர் பேக்ஸ் கவரேஜ் நன்மை. ப்ளூ ரிப்பன் பேக்ஸ் என்பது ஒரு பேக்கேஜ் சேவை (baggage service) ஆகும். இது விமான பயணிகளை மன அமைதியுடன் பறக்க அனுமதிக்க உதவும் ஒரு சேவையாகும்.
இதன்கீழ் உங்களுடையய ஒரு விமான பயணத்திற்கு பின்னர், 4 நாட்கள் தேடியும் உங்களுடைய பை கிடைக்கவில்லை என்றால், ஒவ்வொரு பைக்கும் உத்தரவாதமாக ரூ.1000 வழங்கும். மேலும் ஏர்டெல் வழங்கும் இந்த சேவை உலகளவில் உள்ள விமான நிறுவனங்களுக்கும் பொருந்தும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கவரேஜை வழங்க ப்ளூ ரிப்பன் பேக்ஸ் உடன் ஒரு இந்திய டெலிகாம் நிறுவனம் கூட்டு சேர்வது இதுவே முதல் முறை ஆகும்.
ஆனால் இந்த சேவை ரயில்வே வழியாக பயணிக்கும் எந்த பயணிக்கும் பயனளிக்காது என்பதை நினைவில் கொள்ளவும். மேலும், இந்த சலுகையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ன என்பது தெளிவாக இல்லை. ஆனால் இது அடிக்கடி விமானப் பயணத்தில் ஈடுபடும் ஏர்டெல் போஸ்ட்பெய்டு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இது நிச்சயமாக பயனளிக்கும் ஒரு சேவையாக இருக்கும்.
பார்தி ஏர்டெல் நிறுவனமானது மாதத்திற்கு ரூ.449 முதல் தொடங்கும் அதன் அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்கள் உடனும் ப்ளூ ரிப்பன் பேக்ஸ் சேவையை வழங்குகிறது. ஏர்டெல்லின் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நம்மையும் அணுக கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இப்படியாக நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் கூடுதல் நன்மைகள் ஆனது, ஏர்டெல் சேவையை நோக்கி புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!


Click it and Unblock the Notifications








