Home
News

Jio 5G-க்கு கடும் போட்டி அளிக்க Google Taara.. Airtel-ன் பலே திட்டம்?

உண்மையான "ஏர்டெல் 5ஜி VS ஜியோ 5ஜி" போட்டி இனிமேல் தான் சூடுபிடிக்க போகிறது. முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அஸ்திரவாத்தை எப்படியாவது ஆட்டிப்பார்த்துவிட வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் ஏர்டெல் நிறுவனம் ஒரு தரமான வேலையை செய்துள்ளது.

இந்திய டெலிகாம் துறையில் ஜியோவிற்கு எதிரான பல நடவடிக்கைகளை ஏர்டெல் நிறுவனம் எடுத்து வருகிறது. அதனொரு பகுதியாக கூகுள் தாராவை (Google Taara) பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. கூகுள் தாரா என்றால் என்ன? இதை பயன்படுத்துவதால் ஏர்டெல்லுக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் என்ன பயன் இதோ விவரங்கள்:

Jio 5G-க்கு கடும் போட்டி அளிக்க Google Taara.. Airtel-ன் பலே திட்டம்?

கூகுள் தாரா என்றால் என்ன? கூகுள் தாரா என்பது ஒரு லேசர் இன்டர்நெட் தொழில்நுட்பமாகும் (Laser Internet Technology). இது கூகுளின் பேரன்ட் கம்பெனியான ஆல்பாபெட்டின் (Alphabet) ஆராய்ச்சி ஆய்வகமான எக்ஸ்-ல் உருவாக்கப்பட்ட ஒரு லேசர் தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பம் 20ஜிபிபிஎஸ் (20Gbps) வேகத்தில் தரவை அனுப்ப ஒளி கற்றைகளை (Light Beams) பயன்படுத்துகிறது.

உண்மையில் தாரா தொழில்நுட்பமானது, ஆல்பபெட்டின் ப்ராஜெக்ட் லூன் (Project Loon) தோல்விக்கு பின்னரே உருவாக்கப்பட்டது. நினைவூட்டும் வண்ணம் ப்ராஜெக்ட் லூன் என்பது பலூன் ப்ராஜெக்ட் (Baloon Project) என்றும் அழைக்கப்பட்டது. இது கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர இடங்களில் வேகமான வயர்லெஸ் இணையத்தை (Wireless Internet) வழங்க ஹை-ஆல்டிட்யூட் பலூன்களை (High-altitude Baloons), அதாவது வளிமண்டலத்தில் மிதக்கும் பலூன்களை பயன்படுத்தியது.

Jio 5G-க்கு கடும் போட்டி அளிக்க Google Taara.. Airtel-ன் பலே திட்டம்?

ஆனால் பலூன் ப்ராஜெக்ட் எதிர்பார்த்த அளவிலான வெற்றியை வழங்கவில்லை. அதன்பிறகு 2016 ஆம் ஆண்டில் தாரா உருவானது. இந்த தொழில்நுட்பத்தின்கீழ், குறுகிய மற்றும் கண்ணுக்கு தெரியாத கற்றைகள் வடிவில், காற்றில் வேகமாக டேட்டாவை பரிமாற்றம் செய்வதற்காக ஒளி பயன்படுத்தப்படுகிறது (Fast data transmissions over air).

தாரா டெர்மினல்களுக்கு (Taara Terminals) இடையே பயணிக்கும் பீம்கள் (Beams), லிங்க்குகளை (Links) உருவாக்குக்கின்றன. இதன் விளைவாக ஹை-பேண்ட்வித் கனெக்ஷன்கள் (High-bandwidth connections.) உருவாகின்றன. தாரா தொழில்நுட்பத்தின் ஒளிக்கற்றைகளை இணைக்கவும் சீரமைக்கவும் (Connect and align the light beams) கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Jio 5G-க்கு கடும் போட்டி அளிக்க Google Taara.. Airtel-ன் பலே திட்டம்?

கூகுள் தாரா எப்படி ஏர்டெல்லுக்கு உதவி செய்யும்? இந்தியாவில் தனது 4ஜி மற்றும் 5ஜி செயல்பாடுகளை (4G and 5G Operations) ஆதரிக்க கூகுள் தாராவை பயன்படுத்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. ஏர்டெல்லின் செய்தி தொடர்பாளர் ஒருவரின் கூற்றுப்படி, ஃபைபர்-டார்க் பகுதிகளுக்கு (Fiber-dark areas) இணைப்பை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்காக (பல்வேறு வானிலை சுழற்சிகளில், பல புவியியல் பகுதிகளில்) ப்ராஜெக்ட் தாரா சோதிக்கப்படுகிறது.

ஆனால் எகனாமிக் டைம்ஸின் சமீபத்திய அறிக்கை, சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல், கூகுள் தாராவை வணிக ரீதியிலான வயர்லெஸ் பேக்ஹால் தொழில்நுட்பமாக (Wireless backhaul technology ) பயன்படுத்துவதை பெரிதும் நம்பவில்லை என்றும், மோசமான வானிலையில் இந்த தொழில்நுட்பம் திறமையாக செயல்படாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

கூகுள் தாரா தொழில்நுட்பமானது கிராமப்புறங்கள் மற்றும் அடைய முடியாத பகுதிகளில் (Hard-to-reach places) உள்ள 4ஜி/ 5ஜி பயனர்களுக்கான மொபைல் பிராட்பேண்ட் அனுபவத்தை பாதிக்கலாம். எனவே இந்த தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்கு இன்னும் விரிவான கூட்டு கள சோதனைகள் (Extensive joint field trials) தேவை என்று ஏர்டெல் நிறுவனம் நம்புவது போல் தெரிகிறது.

கூகுள் நிறுவனம் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, சில தினங்களுக்கு முன்னர் ஜெமினி (Gemini) என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்மார்ட் ஏஐ மாடலை (Super Smart AI Model) கூகுள் அறிமுகம் செய்தது. இது வெவ்வேறு வகையான வேலைகளை திறம்பட செய்ய அல்ட்ரா (Ultra), ப்ரோ (Pro) மற்றும் நானோ (Nano) என்கிற மூன்று வெர்ஷன்களில் வருகிறது.

கூகுள் நிறுவனம் தனது ஜெமினி ஏஐ மாடலை, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) உலகின் ஒரு சூப்பர் ஹீரோ என்று குறிப்பிடுகிறது. ஏனென்றால் ஜெமினியால் புகைப்படங்கள் மற்றும் ஆடியோவை புரிந்துகொள்வது முதல் சிக்கலான கணிதம் வரையிலாக.. பல்வேறு பணிகளை எளிமையாக மற்றும் திறமையாக செய்ய முடியும்!

Photo Courtesy: Taara - X, The Moonshot Factory.

More from GizBot

Best Mobiles in India

English summary
tel Planned To Use Google Laser Internet Technology Taara to Support 5G Operations in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X