Home
News

ஏர்டெல்: ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் வந்தது ஐஎம்டி - ஏடிஎம் சேவை.!

இன்று முதல் ஏர்டெல் பயனர்கள், ஏ.டி.எம் கார்டு இல்லாமல் அனைத்து ஏ.டி.எம்-களிலும் பணம் எடுத்துக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

By Sharath

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி தற்பொழுது உலகளாவிய கிளவுட் பெமென்ட் வழங்குநருடன் இணைத்துள்ளது. இன்று முதல் ஏர்டெல் பயனர்கள், ஏ.டி.எம் கார்டு இல்லாமல் அனைத்து ஏ.டி.எம்-களிலும் பணம் எடுத்துக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்று முதல் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி அக்கௌன்ட் உரிமையாளர் அவரின் மொபைல் போன் மூலம் கார்டு இல்லா பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும். இந்த புதிய கார்ட் இல்லா பரிவர்த்தனை முறை "இன்ஸ்டன்ட் மனி ட்ரான்ஸ்பர்" என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சேவை மூலம் பணம் எடுப்பதற்கும் மற்றும் பணம் அனுப்புவதற்கும் பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டன்ட் மனி ட்ரான்ஸ்பர் என்றால் என்ன?

இன்ஸ்டன்ட் மனி ட்ரான்ஸ்பர் என்றால் என்ன?

இன்ஸ்டன்ட் மனி ட்ரான்ஸ்பர்(ஐஎம்டி) என்பது கார்டு இல்லாமல் உடனுக்குடன் பண பரிவர்த்தனை செய்யும் முறை என்பது பொருள். எம்பேஸ் பேமெண்ட் சிஸ்டம் இந்தியா தனியார் நிறுவனம் இந்தச் சேவைக்கான தளம் மற்றும் பயன்பாடு செயல்முறையை உருவாக்கியுள்ளது. இன்ஸ்டன்ட் மனி ட்ரான்ஸ்பர் சேவை இந்தியாவில் உள்ள 20,000 ஏ.டி.எம் களில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது, இந்த ஆண்டின் இறுதிக்குள் நிச்சயம் 1,00,000 ஏ.டி.எம்-களுக்கு மேல் ஏர்டெல் பேமெண்ட் வங்கி சேவை அமல்படுத்தப்படும் என்று ஐர்தேல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எப்படி ஐஎம்டி அக்சஸ் செய்வது?

எப்படி ஐஎம்டி அக்சஸ் செய்வது?

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி சேவை வாடிக்கையாளர்கள் எப்படி ஐஎம்டி அக்சஸ் செய்வது?

ஐஎம்டி சேவை அனைத்து ஏர்டெல் பேமெண்ட் வங்க வாடிக்கையாளர்கள் உங்கள் மொபைல் போன் இல் (*400#) என்று டைப் செய்து அல்லது உங்களுடைய மை ஏர்டெல் ஆப் மூலம் ஐஎம்டி சேவையை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். ஐஎம்டி சேவை வழங்கப்பட்டிருக்கும் ஏ.டி.எம்-களில் இருந்து உங்களின் பண பரிவர்த்தனைகளைச் செய்துகொள்ளலாம்.ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி உங்களின் முதல் இரண்டு பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் தள்ளுபடி வழங்கியுள்ளது.

இந்தியாவின் முதல் ஐஎம்டி சேவை

இந்தியாவின் முதல் ஐஎம்டி சேவை

ஸ்டேட் பேங்க், அஃக்ஸிஸ் பேங்க் மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் போன்ற அனைத்துப் பெரிய வங்கிகளுடன் இணைந்து ஐஎம்டி சேவையை இந்திய முழுதும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவைக்கான உரிமம் இந்திய ரிசெர்வ் வங்கி இன் மூலம் ஏர்டெல் நிறுவனத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது மற்றும் இந்தியாவில் இதுவே முதல் ஐஎம்டி சேவை வழங்கும் நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

5,00,000 பேங்கிங் மையங்கள்

5,00,000 பேங்கிங் மையங்கள்

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி டிஜிடல் வங்கி சேவைகளை, இந்தியாவின் ஒவ்வொரு வீட்டு வாசல் மற்றும் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள கிராமப்புற பகுதிகளில் அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி தற்பொழுது இந்தியாவின் அனைத்து 29 மாநிலங்களிலும் 5,00,000 பேங்கிங் மையங்களில் அமல்படுத்தவுள்ளது. இந்த வங்கி மையங்கள் கணக்கு திறப்பு, பண வைப்பு மற்றும் திரும்பப் பெறுதல், பணம் பரிமாற்ற வசதி ஆகியவற்றை வழங்குகின்றது.

Best Mobiles in India

English summary
Airtel Payments Bank Users Can Now Make Card-Less Cash Withdrawals at Over 1 Lakh ATMs : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X