Home
News

சுனில் ஜி இங்கயும் வந்துடீங்களா.. பேடிஎம், போன்பே சோலிய முடிக்க Airtel-ன் புது பிஸ்னஸ்.. இந்தியா முழுவதும்!

இந்தியா முழுவதுமாக ஒரு "புதிய பிஸ்னஸை" செய்யும் நோக்கத்தின் கீழ், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கி (Airtel Payments Bank) ஆனது ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீசஸ் (Hitachi Payment Services) உடன் கூட்டு சேர்ந்து உள்ளது.

என்ன பிஸ்னஸ்? அது சவுண்ட்பாக்ஸ் பிஸ்னஸ் ஆகும். ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஆனது இந்தியா முழுவதுமான டிஜிட்டல் கட்டண ஏற்றுக்கொள்ளலை விரைவுபடுத்த சவுண்ட்பாக்ஸ் சொல்யூஷனை பயன்படுத்த உள்ளது. இதற்காக எண்ட் டூ எண்ட் பேமண்ட்ஸ் மற்றும் காமர்ஸ் ப்ரொவைடர் ஆன
ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீசஸுடன் தனது கூட்டாண்மையை ஏர்டெல் பேமென்ட்ஸ் பேங்க் அறிவித்துள்ளது.

சுனில் ஜி இங்கயும் வந்துடீங்களா.. இந்தியா முழுவதும்!

ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீசஸ் உடன் இணைந்து தொடங்கப்படும் இந்த சவுண்ட்பாக்ஸ் டிவைஸ் ஆனது பன்மொழி கட்டண அலெர்ட்களை (Multilingual payment alerts) வழங்குவதோடு மட்டுமல்லாமல், வணிக விளம்பரங்களுக்கான ஒரு டைனமிக் சேனல் (dynamic channel for merchant promotions) ஆகவும் செயல்படும்.

அதே நேரத்தில் ஆன்போர்டிங் மற்றும் ட்ரெயனிங் டூ டிவைஸ் டிப்ளாய்மென்ட் (Onboarding and training to device deployment) , கட்டணச் செயலாக்கம் (Payment processing), நிகழ்நேர பகுப்பாய்வு மற்றும் தீர்வுகள் (Real-time analytics and settlements) வரை முழுமையான மெர்சண்ட் லைஃப்சைக்கிளையும் ஆதரிக்கிறது.

வணிகர்களின் ஏற்றுக்கொள்ளலை விரிவுபடுத்துவதன் மூலம், டிஜிட்டல் கட்டண ஏற்றுக்கொள்ளலை இந்த கூட்டாண்மை துரிதப்படுத்தும் மற்றும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாகவும் டிஜிட்டல் முறையிலும் பனைப்பரிவர்த்தனை செய்ய உதவும். இப்படியாக இந்த கூட்டாண்மை - இந்தியா முழுவதும் உள்ள வணிகர்களை நம்பகமான மற்றும் பாதுகாப்பான தொழில்நுட்ப தளத்துடன் மேம்படுத்தும்.

இதுகுறித்து ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க்கின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஆன கணேஷ் அனந்தநாராயணன் கூறுகையில், "சவுண்ட்பாக்ஸ் சொல்யூஷனுக்கான ஹிட்டாச்சி பேமெண்ட் சர்வீசஸுடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஒத்துழைப்பின் மூலம், டிஜிட்டல் பேமெண்ட்டுகளை எளிதாக்குவதன் மூலமும், பெறப்பட்ட பேமெண்ட்டின் நிகழ்நேர ஆடியோ உறுதிப்படுத்தலை வழங்குவதன் மூலமும் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவருக்கும் அதிக எளிமை மற்றும் வசதியைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்கிறார்.

மேலும் "இந்த சவுண்ட்பாக்ஸ் ஆனது சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் ஆனது டிஜிட்டல் பேமெண்ட்டுகளை தடையின்றி மற்றும் பாதுகாப்பாக ஏற்றுக்கொள்ள அதிகாரம் அளிக்கும், அதே நேரத்தில் வணிகர்கள் மிகவும் திறமையாகவும் நம்பிக்கை உடனும் செயல்பட உதவும்" என்றும் அவர் கூறி உள்ளார்.

இதுகுறித்து ஹிட்டாச்சி பேமெண்ட் சர்வீசஸின் டிஜிட்டல் வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன அனுஜ் கோஸ்லா மேலும் கூறுகையில், "எண்ட்-டு-எண்ட் சவுண்ட்பாக்ஸ் சொல்யூஷனை வழங்க ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் உடன் கூட்டு சேர்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்" என்று கூறி உள்ளார்

மேலும் "டிஜிட்டல் பேமெண்ட்டுகளில் எங்கள் நிபுணத்துவத்தை ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க்கின் வலுவான வணிக நெட்வொர்க்குடன் இணைப்பதன் மூலம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியா முழுவதும் உள்ள வணிகர்கள் புதுமையான டிஜிட்டல் பேமெண்ட் தொழில்நுட்பத்தின் தனித்துவமான நன்மைகளை அனுபவிக்க உதவுகிறோம். எங்கள் விரிவான சலுகை நம்பிக்கையைத் தூண்டுகிறது, செயல்திறனை மேம்படுத்துகிறது மற்றும் அதிகரித்து வரும் டிஜிட்டல்-முதல் உலகில் வணிகர்களுக்கு வளர்ச்சியை வளர்க்கிறது." என்று அவர் கூறியுள்ளார்.

இதேபோல ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் (Jio Payments Bank) ஆனது டோல்கேட்களில் "தடையற்ற சுங்கச்சாவடி கட்டண வசூல் முறை" ஆன ஃப்ரீ-ப்ளோ டோல் சிஸ்டமை (Free-flow toll system) செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதன்கீழ் பாஸ்டாக் ஏஎன்பிஆர் (FASTag ANPR) என்கிற ஃபாஸ்டேக் ஆட்டோமெட்டிக் நம்பர் பிளேட் அங்கீகாரம் (Automatic Number Plate Recognition) அடிப்படையிலான மல்டி-லேன் ஃப்ரீ ப்ளோ டோல் சிஸ்டம் (Multi-Lane Free Flow Toll System) செயல்படுத்தப்பட உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Payments Bank Partnered With Hitachi Payment Services to Deliver Soundbox To Merchants
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X