Home
News

உங்ககிட்ட இருக்க டெபிட் கார்டுலாம் விஷம்.. ஏர்டெல் அறிமுகம் செய்த புது ஈக்கோ பிரெண்ட்லி டெபிட் கார்டு..

ஏர்டெல் (Airtel) பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. டெலிகாம் துறை தவிர பேங்கிங் சேவையிலும் மக்களை ஈர்த்து வரும் ஏர்டெல் பேமெண்ட் பேங்கிங் இப்போது, இந்தியாவின் முதல் ஈக்கோ-பிரெண்ட்லி டெபிட் கார்டுகளை (Eco-Friendly Debit Card) அறிமுகப்படுத்தியுள்ளது.

டெபிட் கார்டில் ஈக்கோ பிரெண்ட்லியா? இது என்ன புதுசா இருக்கே? ஈக்கோ பிரெண்ட்லி டெபிட் கார்டு என்றால் என்ன? இது என்ன செய்யும்? மக்கள் இந்த புதிய வகை ஏர்டெல் பேமெண்ட் பேங்கிங் (Airtel Payment Banking) டெபிட் கார்டுகளை எங்கிருந்து வாங்கலாம்? இதை எப்படி ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்? என்பது போன்ற விபரங்களை இப்போது பார்க்கலாம்.

உங்ககிட்ட இருக்க டெபிட் கார்டுலாம் விஷம்.. ஈக்கோ பிரெண்ட்லி கார்டு..

ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் அதன் பயனர்களுக்கு டெலிகாம் சேவையுடன் சேர்த்து பல சேவைகளையும் வழங்கி வருகிறது. உதாரணமாக, பேங்கிங் சேவை (Banking), ஃபாஸ்ட்டேக் ரீசார்ஜ் (Fastag Recharge), டிஜிட்டல் கோல்டு (Digital Gold), செக்யூரிட்டி கேமரா (Security Camera) சேவை என்று பல சேவைகளை வழங்கி வருகிறது. பல புதுமைகளை அதன் சேவையில் வழங்கி வந்த ஏர்டெல் நிறுவனம் மற்றொரு புதுமையை இப்போது மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக ஈக்கோ பிரெண்ட்லி டெபிட் கார்டை நிறுவனம் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது. அதாவது, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களிலிருந்து டெபிட் கார்டை அறிமுகப்படுத்திய முதல் இந்திய வங்கியாக ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி திகழ்கிறது. இந்த நடவடிக்கையானது, நிதித்துறையில் நிலைத்தன்மைக்கான வங்கியின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது.

பொதுவாக டெபிட் கார்டுகள் பிளாஸ்டிக் மூலப்பொருளை கொண்டு உருவாக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பூமிக்கு விஷமாக பார்க்கப்படுகிறது. இன்னும் துல்லியமாக கூறவேண்டும் என்றால், கிரெடிட் கார்டுகளில் உள்ள பிளாஸ்டிக் என்பது பொதுவாக PVCA அல்லது PVC என அழைக்கப்படும் பாலிவினைல் குளோரைடு அசிடேட் (polyvinyl chloride acetate) மூலம் உருவாக்கப்படுகிறது. ஆனால், இப்போது ஏர்டெல் நிறுவனம் இப்போது இதற்கு பதிலாக ஈக்கோ பிரெண்ட்லி பொருளை கொண்டு அதன் டெபிட் கார்டை உருவாக்கியுள்ளது.

r-PVC என்ற சான்றளிக்கப்பட்ட ஈக்கோ பிரெண்ட்லி பொருளில் இருந்து இது தயாரிக்கப்படுகிறது. இந்த பொருளை ஏற்றுக்கொள்வதன்மூலம் பின்வரும் வழிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பாதிக்கும் பொருட்களின் அளவை கணிசமாக குறைக்கலாம் என்று ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக கார்பன் உமிழ்வு (Carbon Emission) அளவை குறைக்க முடியும். சுமார் 50,000 ஆர்-பிவிசி கார்டுகளின் (r-PVC) ஒவ்வொரு தொகுதியும் 350 கிலோ கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

உங்ககிட்ட இருக்க டெபிட் கார்டுலாம் விஷம்.. ஈக்கோ பிரெண்ட்லி கார்டு..

ஹைட்ரோகார்பன் பயன்பாடு (Hydrocarbon Usage) அளவையும் இது குறைக்கும். அதாவது, ஆர்-பிவிசி கார்டுகளின் உற்பத்தி ஹைட்ரோகார்பன் நுகர்வில் 43% அளவை குறைக்கும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. வாட்டர் கன்சர்வேஷன் (Water Conservation) பற்றி பேசுகையில், இது ஒரு தொகுதி ஆர்-பிவிசி கார்டுகளுக்கு 6.6 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்க உதவுகிறதாம்.

ஏர்டெல் பேமெண்ட் பேங்க் இன் இந்த புதிய ஈக்கோ பிரெண்ட்லி கார்டுகள், இரண்டு வேரியண்ட் மாடலாக வெவ்வேறு விதமான சலுகைகளை கொண்டுள்ளது. ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி டெபிட் கார்டு இப்போது தனிப்பயனாக்கப்பட்ட கிளாசிக் கார்டு மற்றும் இன்ஸ்டா கிளாசிக் கார்டு என்று 2 வகையில் வருகிறது. தனிப்பயனாக்கப்பட்ட கார்டை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks App) மூலம் ஆர்டர் செய்யலாம்.

மேலும் இன்ஸ்டா கார்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிப் புள்ளிகளில் மட்டும் வாங்க கிடைக்கும். இந்த ஏர்டெல் ஈக்கோ பிரெண்ட்லி டெபிட் கார்டு சலுகை பற்றி பேசுகையில், இது இந்திய நகரங்களில் 10,000 ரூபாய் வரையிலான இ-காமர்ஸ் நன்மைகள் மற்றும் ஒன் டைன்ஸ் (One Dines) ஆகியவை அடங்கும். விரைவில் நிறுவனமா சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் செய்யப்பட்ட அதிக டெபிட் கார்டு அட்டைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் டெபிட் கார்டுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களிலிருந்து அறிமுகப்படுத்துவது இந்தியாவில் நிலையான வங்கி நடைமுறைகளை நோக்கிய ஒரு முன்னேற்ற படியாக பார்க்கப்படுகிறது. இந்த முன்முயற்சி சுற்றுச்சூழல் கவலைகளுடன் ஒத்துப்போகிறது. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் சுற்றுசூழலை காப்பாற்ற ஏதேனும் ஒரு சிறிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Payments Bank Launches India’s 1st Eco-Friendly Debit Card
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X