வாட்ஸ்அப் இல் இப்போது Airtel Payments Bank அம்சமா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இதோ..

|

முன்னொரு காலத்தில், நாம் வீட்டை விட்டு எங்காவது வெளியில் செல்லும் போது, நம்முடைய பர்ஸ் அல்லது ரொக்க பணத்தை எடுத்துச் செல்ல மறந்திருப்போம். அதை மீட்டெடுக்க மீண்டும் வீட்டிற்கு வந்து, விட்டுச் சென்ற பர்ஸ் அல்லது பணத்தைக் கையில் எடுத்துக்கொண்ட பயணத்தை மீண்டும் தொடங்கிய கடுப்பான நாட்கள் எல்லாம் நிறைய இருக்கிறது. குறைந்தது நம்முடைய வாழ்வில் ஒருமுறையாவது இந்த சூழ்நிலையை நாம் சந்தித்திருப்போம். இன்னும் சிலர் வீட்டை விட்டு நீண்ட தூரம் சென்றடைந்த பிறகு கையில் பணம் கொண்டுவரவில்லை என்பதை ஒரு சங்கடமான சூழ்நிலையில் கூட உணர்ந்திருக்க வாய்ப்புள்ளது.

நம் வாழ்க்கை அனுபவத்தை மேம்படுத்த உதவும் டிஜிட்டல் பேமெண்ட் அம்சம்

நம் வாழ்க்கை அனுபவத்தை மேம்படுத்த உதவும் டிஜிட்டல் பேமெண்ட் அம்சம்

ஆனால், இன்றைய காலகட்டத்தில் இந்த நிலைமையைச் சந்தித்தாலும் கவலையே இல்லை. காரணம், நம் அனைவரின் கரங்களிலும் ஒரு ஸ்மார்ட்போன் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இப்போது நம்முடைய ஸ்மார்ட்போன்களில் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் வாலெட்கள் இருக்கிறது. இது நம்மைக் காப்பாற்ற 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி நம் வாழ்க்கை எவ்வளவு மேம்படுத்தியுள்ளது என்பதற்கு இதுவே ஒரு அற்புதமான சான்று. டிஜிட்டல் பேமெண்ட் அனுபவத்தை இன்னும் ஒரு படி மேம்படுத்த வாட்ஸ்அப் இப்போது களமிறங்கியுள்ளது.

முதலில் ஒரு சாட்டிங் தளம்.. இப்போது டிஜிட்டல் பேமெண்ட் தளம்

முதலில் ஒரு சாட்டிங் தளம்.. இப்போது டிஜிட்டல் பேமெண்ட் தளம்

முதலில் வெறும் ஒரு சாட்டிங் தளமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த வாட்ஸ்அப் இப்போது, டிஜிட்டல் பேமெண்ட் அம்சத்தையும் ஆதரிக்கிறது. இதன் மூலம், வெறும் சில நொடிகளில் நீங்கள் பணப் பரிவத்தனையைச் செய்து முடிக்க முடியும். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், சாட்டிங் செய்து கொண்ட இனி உங்களால் ஒரு வெற்றிகரமாக ஆன்லைன் மனி டிரான்ஸ்பெரிங்கை செய்து முடிக்க முடியும். இதற்காக நிறுவனம் இப்போது உங்களுக்கு வாட்ஸ்அப் பேமெண்ட் சேவையை பயன்படுத்த அனுமதிக்கிறது.

90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..

ஏர்டெல் பேமெண்ட் பேங்க் அம்சம் இப்போது வாட்ஸ்அப்பிலா?

ஏர்டெல் பேமெண்ட் பேங்க் அம்சம் இப்போது வாட்ஸ்அப்பிலா?

இந்தியாவின் வெற்றிகரமான ஆன்லைன் பேமெண்ட் வங்கிகளில் ஒன்றாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் Airtel Payments Bank, இனி நேரடியாக WhatsApp பேமெண்ட் மூலம் கிடைக்கிறது. உங்கள் ஸ்மார்ட்போனில் மனி வாலெட் பயன்பாட்டைத் திறப்பது ஒரு தொந்தரவாக இருந்தால், இனி கவலைப்பட வேண்டாம். காரணம், இனி வாட்ஸ்அப் மூலம் நேரடியாக ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியுடன் ஆன்லைன் பேங்கிங் சேவையைப் பயன்படுத்தலாம். இந்த சேவையைத் தொடங்குவதற்கு, '8800688006' என்ற எண்ணிற்கு 'Hi' என்று மெசேஜ் அனுப்பவும்.

LPG சிலிண்டரில் உள்ள எண்ணின் அர்த்தம் என்ன தெரியுமா? இது உங்கள் பாதுகாப்பிற்கானதா? இனி கூர்ந்து கவனியுங்கள்..LPG சிலிண்டரில் உள்ள எண்ணின் அர்த்தம் என்ன தெரியுமா? இது உங்கள் பாதுகாப்பிற்கானதா? இனி கூர்ந்து கவனியுங்கள்..

24/7 மணி நேர தடையில்லா வங்கி சேவை இனி உங்கள் கைகளில்

24/7 மணி நேர தடையில்லா வங்கி சேவை இனி உங்கள் கைகளில்

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இனைந்து வாட்ஸ்அப் பேங்கிங்கின் கீழ் கிடைக்கும் முக்கிய அம்சங்கள் பற்றிப் பார்க்கையில், வாட்ஸ்அப் மூலம் ஆன்லைன் பேங்கிங் செய்யும் அனுபவம் மிகவும் எளிமையானது. முக்கியமாக, சேவை குறைபாடு பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. வங்கி விடுமுறை நாட்களிலும் கூட ஆன்லைன் வங்கி சேவை வாட்ஸ்அப் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் என்பதை நிறுவனம் உறுதியளித்துள்ளது. வாட்ஸ்அப் வழியாக 24/7 வங்கி சேவையை நீங்கள் பயன்படுத்த முடியும்.

உங்கள் வங்கி விபரங்கள் எப்படிப் பாதுகாக்கப்படுகிறது தெரியுமா?

உங்கள் வங்கி விபரங்கள் எப்படிப் பாதுகாக்கப்படுகிறது தெரியுமா?

உங்கள் பேங்கிங் விஷயங்களைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை, கரணம் உங்களுடைய அனைத்து பேமெண்ட் தகவலும் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. எப்படி உங்களுடைய வாட்ஸ்அப் மெசேஜ்கள் அனைத்தும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படுகிறதோ, அதேபோல், உங்களுடைய வங்கி பரிவர்த்தனை விபரங்களும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளருக்குப் பதிலளிப்பதில் எந்தவித தாமதமும் ஏற்படுவதில்லை என்று நிறுவனம் கூறியுள்ளது.

என்னென்ன சேவைகளை நாம் வாட்ஸ்அப் மூலம் மேற்கொள்ளலாம்?

என்னென்ன சேவைகளை நாம் வாட்ஸ்அப் மூலம் மேற்கொள்ளலாம்?

சரி, வாட்ஸ்அப் இந்த புதிய அம்சத்தின் மூலம் என்னென்ன சேவைகளை நாம் பயன்படுத்த அனுமதிக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். வங்கிச் சேவைகள், பரிசு அட்டைகள் மற்றும் தங்கம் வாங்குதல், FASTag சேவைகள், கடன்கள், ரீசார்ஜ்கள் மற்றும் பில் பேமெண்ட்கள் என அனைத்தையும் நீங்கள் Airtel Payments Bank மூலம் WhatsApp வழியாகச் செய்து முடிக்கலாம். இதன்படி, உங்கள் கணக்குத் தகவல் யாருடனும் பகிரப்படவில்லை, மேலும் வாட்ஸ்அப்பில் பின் போன்ற எந்த ரகசியத் தகவலையும் நீங்கள் உள்ளிட வேண்டிய அவசியமில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Gmail இல் கொட்டிக்கிடக்கும் மெயில்களை எப்படி எளிமையாக டெலீட் செய்வது? இது தெரிஞ்சா உங்கள் மெயில் பாக்ஸ் கிளீன்Gmail இல் கொட்டிக்கிடக்கும் மெயில்களை எப்படி எளிமையாக டெலீட் செய்வது? இது தெரிஞ்சா உங்கள் மெயில் பாக்ஸ் கிளீன்

இதற்காகக் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுகிறதா?

இதற்காகக் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுகிறதா?

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியுடன் ஆன்லைன் பேங்கிங் சேவைகளைச் செய்ய வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. நீங்கள் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளராக இல்லாவிட்டாலும், நிறுவனத்தின் வாட்ஸ்அப் சாட்போட்டைப் பயன்படுத்தி, உங்களிடம் உள்ள எந்தக் கேள்விகளுக்கும் பதில்களைப் பெறலாம். நீங்கள் தொடங்குவதற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணில் 'Hi' என்று டைப் செய்து சென்ட் செய்தால் மட்டும் போதும்.

பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.. ஒரு Hi மெசேஜ் போதுமே

பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.. ஒரு Hi மெசேஜ் போதுமே

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிக்காக நீங்கள் வெளிப்படையாக WhatsAppல் பதிவு செய்ய வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலே உள்ள எண்ணுக்கு நீங்கள் ஒரு 'ஹாய்' என்று அனுப்பலாம், மேலும் வங்கி தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு வரத் தொடங்கும். ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் முறையான வணிகக் கணக்கில் நீங்கள் அரட்டை அடிக்கிறீர்கள் என்பதை அடையாளம் காண உதவும் வகையில், சுயவிவரத்தில் பச்சை நிற சரிபார்க்கப்பட்ட அடையாளம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் பேமெண்ட் அம்சத்தை பயன்படுத்தி, உங்கள் அனுபவம் எப்படி இருந்தது என்று எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

WhatsApp, Messenger, Telegram டிரிக்ஸ்: எரிச்சலூட்டும் மெசேஜ்களை எப்படி மியூட் செய்வது? இனி பிளாக் வேண்டாம்..WhatsApp, Messenger, Telegram டிரிக்ஸ்: எரிச்சலூட்டும் மெசேஜ்களை எப்படி மியூட் செய்வது? இனி பிளாக் வேண்டாம்..

Best Mobiles in India

English summary
Airtel Payments Bank Is Now On WhatsApp With End To End Encrypted Safety Feature : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X