ஏர்டெல்-அமேசான்: 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கினால் ரூ.2600 கேஷ்பேக்.!
இதன்படி நீங்கள் அமேசான் இணையதளம் சென்று சுமார் 65 வகையான ஸ்மார்ட்போனை ஒன்றை வாங்கி இந்த சலுகையை பெறலாம்.
ஏர்டெல் மற்றும் அமேசான் நிறுவனம் இணைந்து புதியதாக 4ஜி ஸ்மார்ட்போன் மொபைல்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் தரும் திட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் மூலம் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் மூலம் சுமார் 65 வகையான ஸ்மார்ட்போன்களில் ஒன்றை நீங்கள் வாங்கினால் இந்த கேஷ்பேக் என்னும் புதிய சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.

பாரதி ஏர்டெல் இன்று அறிவித்துள்ள புதிய திட்டம்தான் ரூ.2600 கேஷ்பேக் தரும் திட்டம். அமேசான் நிறுவனத்துடன் பார்ட்னராக இணைந்து ஏர்டெல் நிறுவனம் தரும் இந்த திட்டத்திற்கு 'மேரா ஃபேலே 4ஜி ஸ்மார்ட்போன்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன்படி இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் இணையதளத்துடன் ஏர்டெல் இணைந்துள்ளது.

இதன்படி நீங்கள் அமேசான் இணையதளம் சென்று சுமார் 65 வகையான ஸ்மார்ட்போனை ஒன்றை வாங்கி இந்த சலுகையை பெறலாம். இதில் சாம்சங், ஒன்பள்ஸ், சியாமி, ஹானர், எல்ஜி, லெனோவா மற்றும் மோட்டோ ஆகிய நிறுவனங்களின் சுமார் 65 மாடல்கள் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் ரூ.2000 கேஷ்பேக்கை 36 மாதங்களில் தருகிறது. அதுமட்டுமின்றி அமேசான் நிறுவனமும் ரூ.600 கேஷ்பேக் தந்து அதன்மூலம் அமேசான் பே மூலம் ரூ.169 ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த சலுகையை பெற நீங்கள் ரூ.3399 விலையில் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கியிருக்க வேண்டும்
இந்த கேஷ்பேக் வசதியை பெற வாடிக்கையாளர்கள் அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் செய்து ஒரு 4ஜி ஸ்மார்ட்போனை முழுப்பணம் செலுத்தி வாங்க வேண்டும். அதன்பின்னர் அந்த வாடிக்கையாளர் 18 மாதங்களில் ரூ.3500க்கு ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். அவ்வாறு ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு ரூ.500 கேஷ்பேக் கிடைக்குக்ம். பின்னர் மீண்டும் இன்னொரு 18 மாதங்களில் ரூ.3500க்கு ரீசார்ஜ் செய்தால் அதன்பின்னர் உங்களுக்கு ரூ.1500 கேஷ்பேக் கிடைக்கும். இதன் மூலம் உங்களுக்கு 36 மாதங்களில் ரூ.2000 கேஷ்பேக் கிடைக்கும்.

அதேபோல் அமேசான் நிறுவனம் வழங்கும் ரூ.600 கூடுதல் கேஷ்பேக்கை அதே வாடிக்கையாளர் ரூ.169 மதிப்புடைய ஏர்டெல் ரீசார்ஜ்களை 24 முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் அந்த வாடிக்கையாளரின் பே பேலன்ஸ் ஒவ்வொரு மாதமும் ரூ.25 வீதம் 24 மாதங்களுக்கு வரவு வைக்கப்படும். இந்த ரூ.169 ரீசார்ஜ் என்பது அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 1ஜிபி டேட்டாக்களை 28 நாட்களுக்கு தரும் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சலுகையின் மூலம் வாங்கப்பட்ட 4G ஸ்மார்ட்போன்களின் உரிமையாளர் வாடிக்கையாளருடன் இருப்பதால், ஏர்டெல் அல்லது அமேசான் இந்தியாவிற்கு எந்த நேரத்திலும் பணப் பயன்களைப் பெற சாதனத்தை திருப்பித்தர தேவையில்லை. அமேசான் மீது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீமியம் 4G ஸ்மார்ட்போன்களில் இந்த சலுகை கிடைக்கும். அமேசான் மீது ரூ .169 ரீசார்ஜ் செய்யப்பட்டிருக்கும் காசோலை வாயிலாக, வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படும்.


Click it and Unblock the Notifications