5ஜி சேவை : ஏர்டெல் & எரிக்கசன் நிறுவனங்களிடையே புதிய ஒப்பந்தம்.!

எரிக்சன் சார்பில் 5ஜி தொழில்நுட்பத்தின் முழுமையான செயல்விளக்கம் அந்நிறுவனத்தின் 5ஜி சோதனை தளத்தைபயன்படுத்தி இப்போது விவரிக்கப்பட்டுள்ளது.

By Prakash
|

இந்தியா முழுவதும் தற்சமயம் 4ஜி சேவை அதிகமாக பயன்படுகிறது, ஸ்வீடன் நாட்டை சார்ந்த டெலிகாம் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமான எரிக்சன் இந்தியாவில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து விரைவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதையடுத்து பார்தி ஏர்டெல் மற்றும் எரிக்சன் நிறுவனங்களிடையே தற்சமயம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இதே போல் உலகின் 36 நிறுவனங்களுடன் எரிக்சன் நிறுவனம் ஒப்பந்தமிட்டுள்ளது.

 5ஜி தொழில்நுட்பம்:

5ஜி தொழில்நுட்பம்:

இந்த 5ஜி தொழில்நுட்பம் பொறுத்தவரை 2020-ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் இவற்றின் செயல் விளக்கம் நாட்டின் வலுவான 4ஜி சுற்றுச்சூழலை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என எரிக்சன் நிறுவன துணை தலைவர் தகவல் மிர்டிலோ தெரிவித்தார்.

செயல் விளக்கம்:

செயல் விளக்கம்:

எரிக்சன் சார்பில் 5ஜி தொழில்நுட்பத்தின் முழுமையான செயல்விளக்கம் அந்நிறுவனத்தின் 5ஜி சோதனை தளத்தை
பயன்படுத்தி இப்போது விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொழில்நுட்பம் அதிவேக சேவையை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 36நிறுவனங்கள்:

36நிறுவனங்கள்:

ஏர்டெல் மற்றும் எரிக்சன் நிறுவனங்களிடையே தற்சமயம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, இதேபோல் 5ஜி சேவையை மேம்படுத்த
உலகம் முழுவதும் 36 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என எரிக்சன் நிறுவன துணை தலைவர் தகவல் மிர்டிலோ தெரிவித்தார்.

4ஜி சேவை:

4ஜி சேவை:

இதற்குமுன்பு ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி மற்றும் இதர சேவைகளை எரிக்சன் நிறுவனம் வழங்கி வந்துள்ளது,எனவே இப்போது வரும் இந்த புதிய தொழில்நுட்பம் அனைவருக்கும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.1,77,489 கோடி:

ரூ.1,77,489 கோடி:

இந்த புதிய 5ஜி தொழில்நுட்பம் பொறுத்தவரை 2026-ம் ஆண்டு வாக்கில் ரூ.1,77,489 கோடி வருவாயை இந்திய டெலிகாம் நிறுவனங்கள் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என எரிக்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 ஏர்டெல் திட்டம்:

ஏர்டெல் திட்டம்:

தற்போது கிடைக்கும் ஏர்டெல் ரூ.349/- பேக் ஆனது முன்பு போலல்லாமல், இப்பொழுது 1.5ஜிபி அளவிலான டேட்டா, 100 இலவசஎஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை நாள் ஒன்றிருக்கு வழங்குகிறது. கிட்டத்தட்ட ரூ.3,999/- திட்டத்தின் மாதாந்திர செலவு கணக்கோடு ஒற்றுப்போகும் இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது தான் ஒரே வித்தியாசம்.

Best Mobiles in India

English summary
Airtel Partners Ericsson on 5G Wireless Ericsson Demonstrates 5G Technology in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X