2 திட்டங்களில் அள்ளி தரும் Airtel.. ஓடிடி.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. என்ன விலை?
ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தினாலும் இன்னும் பட்ஜெட் விலையில் சில அசத்தலான திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் இரண்டு வருடாந்திர ப்ரிபெய்ட் திட்டங்களை ஓடிடி சலுகையும் வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம். இப்போது அந்த இரண்டு ஏர்டெல் திட்டங்களின் நன்மைகளை இங்கே பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 3599 prepaid recharge plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா வழங்கப்படும் . ஆனாலும் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls)சலுகை இந்த ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள்
இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
அதாவது அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), விங்க் மியூசிக் (Wynk Music),அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5g data) போன்ற சலுகைகளை இந்த ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை. இன்னொரு வருடாந்திர ப்ரிபெய்ட் திட்டம் தான் ஓடிடி நன்மையை வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) ஆனது 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (disney + Hotstar) சந்தாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். இதுதவிர பல சலுகைகள் இதில் கிடைக்கும்.

அதன்படி அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), விங்க் மியூசிக் (Wynk Music), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data) போன்ற சலுகைகளை இந்த ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பெற முடியும். குறிப்பாக ஓடிடி நன்மைகளுடன் அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா கிடைப்பதால் இந்த திட்டத்தில் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.
அதேபோல் ஜியோ நிறுவனம் ரூ.3599 மற்றும் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. ஆனால் ஏர்டெல் நிறுவனம் போன்று ஓடிடி நன்மையை வழங்கவில்லை ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள். எனவே வருடாந்திர ப்ரிபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்ய நினைக்கும் பயனர்கள் ஏர்டெல் திட்டங்களைத் தேர்வு செய்வது மிகவும் நல்லது.


Click it and Unblock the Notifications