மாஸ் காட்டும் ஏர்டெல்: விஐ, ஜியோ வழங்கிடாத இரண்டு தனித்துவ ரீசார்ஜ் திட்டம்- 84 நாட்களுக்கு இலவசம்!

|

பாரதி ஏர்டெல் அதன் போர்ட்ஃபோலியோவில் இரண்டு தனித்துவமான திட்டங்களை கொண்டிருக்கிறது. இது ஜியோ, விஐ போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்கிடாத தனித்துவமான நன்மைகளை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டங்களில் வழங்கப்படும் நன்மைகள் காரணமாக இவை தனித்துவமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு திட்டங்களும் பயனர்களுக்கு ஏராளமான டேட்டாவை வழங்குகின்றன.

ஜியோ, ஏர்டெல், விஐ

ஜியோ, ஏர்டெல், விஐ

இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டு கொண்டு பல்வேறு சலுகைகளோடு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஜியோ, ஏர்டெல், விஐ ஆகிய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கான வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஜியோ நிறுவனம் அறிமுகமான குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்து இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட தொலைத் தொடர்பு நிறுவனமாக திகழ்கிறது. நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டராக திகழ்வது பாரதி ஏர்டெல். இந்திய டெலிகாம் சந்தையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு வழங்கும் திட்டங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். இதில் இருந்து ஏர்டெல் நிறுவனம் தன்னை வேறுபடுத்தி காட்டுவதற்கு என இரண்டு தனித்துவ ரீசார்ஜ் திட்டங்களை பயனர்களுக்கு வழங்குகிறது.

தனித்துவமான ரீசார்ஜ் திட்டம்

தனித்துவமான ரீசார்ஜ் திட்டம்

ஜியோ, விஐ போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்கிடாத இரண்டு தனித்துவமான திட்டங்களை ஏர்டெல் தங்களது பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டங்களில் வழங்கப்படும் நன்மைகள் காரணமாக இவை தனித்துவமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு திட்டங்களும் பயனர்களுக்கு ஏராளமான டேட்டாவை வழங்குகின்றன. இந்த திட்டங்களின் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

பாரதி ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல் நிறுவனம் பயனர்களுக்கு வழங்கும் முதல் தனித்துவமான திட்டமானது ரூ.699 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டமானது 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இது பயனர்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் பிற நன்மைகள் குறித்து பார்க்கையில், இதில் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.

அதிகரிக்கும் கொரோனா பரவல்- கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டிய சாதனம்: 80% தள்ளுபடியுடன் அமேசானில் வாங்கலாம்!அதிகரிக்கும் கொரோனா பரவல்- கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டிய சாதனம்: 80% தள்ளுபடியுடன் அமேசானில் வாங்கலாம்!

56 நாட்களுக்கு Amazon Prime அணுகல்

56 நாட்களுக்கு Amazon Prime அணுகல்

இந்த திட்டத்தில் கிடைக்கும் தனித்துவமான அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த திட்டம் செல்லுபடியாகும் 56 நாட்களுக்கும் கூடுதல் கட்டணமின்றி இலவசமாக Amazon Prime அணுகல் வழங்கப்படுகிறது. அதோடு இந்த திட்டத்தில் Airtel Xstream Mobile pack, Apollo 24 உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகின்றன. மேலும் பாரதி ஏர்டெலுக்கு சொந்தமான விங்க் மியூசிக் மற்றும் ஹலோடியூன்ஸ் அணுகலும் இலவசமாக கிடைக்கிறது.

பாரதி ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல் வழங்கும் இரண்டாவது தனித்துவ திட்டமானது ரூ.999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு ஆதரவு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் அணுகலை வழங்குகிறது.

ரூ.999 திட்டத்தில் கிடைக்கும் இலவச அணுகல்கள்

ரூ.999 திட்டத்தில் கிடைக்கும் இலவச அணுகல்கள்

இந்த திட்டத்தில் கிடைக்கும் தனித்துவமான அம்சங்கள் குறித்து பார்க்கையில், ரூ.699 ரீசார்ஜ் திட்டத்தில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் இந்த திட்டத்திலும் வழங்கப்படுகிறது. திட்டம் செல்லுபடியாகும் 84 நாட்களுக்கும் கூடுதல் கட்டணமின்றி அமேசான் பிரைமுக்கான இலவச சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் Airtel Xstream Mobile pack, Apollo 24, Hellotunes மற்றும் Wynk Music அணுகலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel offers two unique prepaid plans Which not offered by Jio, Vi

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X