Home
News

Jio கொடுக்காத ரூ.7000 நன்மையை கொடுத்த Airtel.. பெஸ்ட் டீல் உடன் iPhone 15 வாங்க நல்ல சான்ஸ்..

இந்த வருட தீபாவளி பண்டிகை நிறைவடைந்தும், சலுகைகளில் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை. அதிலும் குறிப்பாக, ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 14 (iPhone 14), ஐபோன் 13 (iPhone 13) மீது கிடைக்கும் சலுகைகளில் எண்ணிக்கை குறையவே இல்லை.

ஆம், இன்னும் ஐபோன் சாதனங்கள் மீது பலப்பல தளங்களில் சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு, சிறப்பு சலுகைகள் மற்றும் சிறப்பு கூப்பன் நன்மைகள் என்று பல விதவிதமான அறிவிப்புகளை தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், ஏர்டெல் (Airtel) நிறுவனம் அறிவித்துள்ள ரூ. 7,000 மதிப்புள்ள சிறப்பு நன்மையை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

Jio கொடுக்காத ரூ.7000 நன்மையை கொடுத்த Airtel.. iPhone 15 வாங்க சான்ஸ்!

நீங்கள் புதிதாக ஒரு ஐபோன் 15 சாதனத்தை பெற நினைத்தால், அதிலும் நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு 7000 ரூபாய் ஜாக்பாட் அடித்துள்ளது. இந்த 7000 மதிப்பிலான நன்மையை பெற விரும்பும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த பதிவை இறுதி வரை தொடர்ந்து படியுங்கள். ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து சிறந்த மேம்படுத்தல் சலுகை அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.

ஐபோன் 15 உடன் ஏர்டெல் வழங்கும் ரூ. 7000 மதிப்பிலான நன்மை (Airtel Rs 7000 Benefits On Getting iPhone 15):

நீங்கள் எச்டிஎஃப்சி (HDFC) வங்கி கிரெடிட் கார்டிலிருந்து கேஷ்பேக்கிற்கான சலுகைகளும் கிடைக்கிறது. இருந்தாலும், ஏர்டெல்லிலிருந்து கிடைக்கும் சலுகைகளை பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம். புதிய ஐபோன் 15 (iPhone 15) சாதனத்தை அமேசான் (Amazon) தளத்தில் இருந்து வாங்கும் போது, கேஷ்பேக் நன்மையுடன் இப்போது கூடுதல் சிறப்பு தள்ளுபடியையும் பெறலாம்.

இரண்டு சலுகைகளையும் உங்களால் இணைக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும் - a ) அமேசான் கேஷ்பேக் மற்றும் ஏர்டெல் தள்ளுபடி கூப்பன் மற்றும் b) HDFC வங்கி கார்டு கேஷ்பேக். அவற்றில் ஒன்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் புதிய ஐபோன் 15 சாதனத்தை பெற்றவுடன் இந்த சலுகைக்கு நீங்கள் தகுதியானவர்களாகிவிடுவீர்கள்.

ரூ.2000 மதிப்பிலான கூப்பன் நன்மையை எப்படி பெறுவது?

ஐபோன் 15 சாதனத்தை வாங்கிய நாளிலிருந்து 60 நாட்களுக்குள் ஏர்டெல் போஸ்ட்பெய்டு சிம்மை இயக்கினால், ஏர்டெல்லில் இருந்து ரூ.2000 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்களைப் பெற நீங்கள் தகுதி பெறுவீர்கள். இந்த சலுகைக் காலம் நவம்பர் 10 முதல் டிசம்பர் 30, 2023 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.

வாடிக்கையாளர் அமேசானிலிருந்து சாதனத்தை வாங்கினால், சலுகை நீட்டிக்கப்படும். ஏர்டெல் போஸ்ட்பெய்டு சிம்மை ஆக்டிவேட் செய்தவுடன், வாடிக்கையாளர் ஏர்டெல் போஸ்ட்பெய்டு திட்டங்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த சலுகை ஏர்டெல் கார்ப்பரேட் போஸ்ட்பெய்டு சிம்களுக்கானது அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.

ரூ.5000 மதிப்பிலான அமேசான் கூப்பனை பெறுவது எப்படி?

ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளராக மாறிய 20 நாட்களுக்குள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸ் பிரதிபலிக்கும் வகையில், ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து பயனர்கள் தலா ரூ.200 வீதம் 10 கூப்பன்களைப் பெறுவார்கள். ஐபோன் 15 ஐ வாங்கியதிலிருந்து 60 நாட்களுக்குள் ஏர்டெல் போஸ்ட்பெய்டு சிம் இயக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். ஒரு நேரத்தில், பயனர் ஒரு கூப்பனை ரீசார்ஜில் பயன்படுத்த முடியும்.

மேலும், வாடிக்கையாளர் சரியான விதிமுறைகளைப் பின்பற்றினால், அமேசான் பே கிஃப்ட் கார்டு வடிவில் அமேசானிலிருந்து ரூ. 5000 கேஷ்பேக் பெறுவார். ஏர்டெல் போஸ்ட்பெய்டு சிம் பெற விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த சலுகையாகும். ஐபோன் வாங்க விருப்பமுள்ள ஏர்டெல் பயனர்கள் கட்டாயம் இந்த சலுகையை தவறவிடக்கூடாது.

Best Mobiles in India

English summary
Airtel Offers Rs 7000 Worth Benefits On Purchasing New iPhone 15 From Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X