Home
News

அப்போ கட்டண உயர்வு., இப்போ ஆறுதலா?- ரூ.50 உடனடி தள்ளுபடி: ஏர்டெல் பயனர்களே என்ஜாய்., உடனே ரீசார்ஜ் செய்யவும்!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை உயர்த்தி அறிவித்த மாதக்கணக்காகியும் இன்னும் வாடிக்கையாளர்கள் திருப்திப்படுத்த நிறுவனங்களால் முடியவில்லை என்றே கூறலாம். விலை உயர்ந்த புதிய திட்டங்கள் பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. வாடிக்கையாளர்களை புதுப்பிக்கப்பட்ட கட்டணங்களுக்குள் கொண்டு வர நிறுவனம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன்படி ஏர்டெல் அதன் சில ப்ரீபெய்ட் திட்டங்களுடன் ரூ.50 தள்ளுபடியை வழங்குகிறது. இந்த தள்ளுபடி ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஏர்டெல் ஆப்ஸ் மூலம் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் போது கூடுதல் டேட்டா கூப்பன்களும் வழங்கப்படுகிறது.

ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் வழங்கும் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் நன்மைகளை வழங்குகிறது. அதோடு இந்த திட்டமானது தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால் இந்த சிறந்த திட்டம் வெறும் ரூ.309-க்கு கிடைக்கிறது. இந்த திட்டம் கூடுதல் 2 ஜிபி டேட்டா நன்மையுடன் வருகிறது. பயனர்கள் தங்கள் செல்லுபடியாகும் காலம் முழுவதும் இதை ரீடிம் செய்யலாம். இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டம் முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் 56 ஜிபி டேட்டா மற்றும் 2 ஜிபி கூடுதல் டேட்டா உட்பட 58 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ரூ.599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ரூ.599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ரூ.599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது ரூ.50 தள்ளுபடி சலுகையுடன் வரும் மற்றொரு ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்த திட்டமானது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான அணுகல் உடன் வருகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகளுக்கானது, இது தினசரி 3 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்பவர்கள் ரூ.549 என்ற தள்ளுபடி கூப்பனை பெறலாம். இந்த திட்டம் முழு செல்லுபடியாகும் காலத்திற்கு 84 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இது ஒரு சிறந்த திட்டமாகும்.

ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்கும் மற்றொரு ஏர்டெல் திட்டமாகும். இந்த திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றொரு சலுகையாகும். இந்த திட்டமானது வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்பவர்கள் இந்த திட்டத்தின் மூலம் 4 ஜிபி கூடுதல் டேட்டா கூப்பன்களை பெறுவார்கள். இது செல்லுபடியாகும் காலத்தில் எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய தரவு கூப்பன் ஆகும்.

77 நாட்களுக்கு செல்லுபடியாகும்

77 நாட்களுக்கு செல்லுபடியாகும்

ஏர்டெல்-ன் ரூ.666 திட்டமானது கடந்த வாரம் நிறுவனம் அறிமுகப்படுத்திய திட்டமாகும். இந்த ப்ரீபெய்ட் திட்டமானது 77 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது நிறுவனம். அதேபோல் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளாக பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு மற்றும் அப்பல்லோ 24 மணிநேர அணுகல் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது. ஏர்டெல் ஷா அகாடமியின் இலவச ஆன்லைன் படிப்புகள், ஃபாஸ்ட்டாக்கிற்கான ரூ.100 கேஷ்பேக், இலவச ஹலோ டியூன்கள் மற்றும் விங்க் மியூசிக் அணுகலுடன் வருகிறது.

ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பிற்கான இலவச அணுகலை வழங்குகிறது. இந்த சலுகையை வழங்கும் ஒரே நிறுவனம் ஏர்டெல் மட்டுமே ஆகும். இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவையுடன் வருகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் குறித்து பார்க்கையில் இது அப்பல்லோ 24-க்கான அணுகல், இலவச ஆன்லைன் படிப்புகள், ஃபாஸ்ட்டேக்கில் ரூ.100 கேஷ்பேக், இலவச ஹலோ ட்யூன்கள், விங்க் மியூசிக் அணுகலுடன் வருகிறது.

இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு

இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு

உலக அளவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. இந்தியாவில் பல்வேறு பிரிவு நிறுவனங்களும் தங்களை நிலைநிறுத்தி வளர்ச்சியடையச் செய்ய போராடி வருகின்றன. இதில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விதிவிலக்கு அல்ல. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன. ஒவ்வொரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க குரல் அழைப்புகள், டேட்டா சேவை முதல் ஓடிடி அணுகலை வழங்கி வருகின்றன.

60 சதவீதம் பேர் மொபைல் இணையத்தை பயன்படுத்துவதாக ஆய்வுத் தகவல்கள்

60 சதவீதம் பேர் மொபைல் இணையத்தை பயன்படுத்துவதாக ஆய்வுத் தகவல்கள்

இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது 60 சதவீதம் பேர் மொபைல் இணையத்தை பயன்படுத்துவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து விலை உயர்வை அறிவித்து வருகின்றன. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இந்த நடவடிக்கைக்கு டிராய் என்ன பதில் அளிக்கப்போகிறது என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது. மறுபுறம் நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். பெரும் நஷ்டம் ஏற்படுவதன் காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலை அதிகரிப்பு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து வருகின்றன.

Best Mobiles in India

English summary
Airtel Offers Rs.50 Discount For these Prepaid Recharge plans!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X