Airtel Postpaid Data Add on Packs: ரூ.100 மற்றும் ரூ.200 திட்டங்கள்: என்னென்ன நன்மைகள்.!
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து பிஎஸ்என்எல், ஜியோ, வோடபோன் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறைவான செலவில்
ஆனால் சமீபத்திய கட்டண உயர்வுக்கு பிறகு 2ஜிபி தினசரி டேட்டாவை 84நாட்களுக்கு வழங்கும் திட்டத்திற்குரூ.700வரை செலவாகிறது. இதை விட குறைவான செலவில் அதிகமான நன்மைகளை வழங்கும் பல போஸ்ட்பெய்ட்திட்டங்களும் உள்ளன.

ரோல்ஓவர் வசதி
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் பாரதி ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.499போஸ்ட்பெய்ட் திட்டமானது 75ஜிபி டேட்டா, 200ஜிபி/500ஜிபி வரை ரோல்ஓவர் வசதி மற்றும் வரம்பற்ற குரல்அழைப்புபோன்ற நன்மைகளையும் வழங்குகிறது.

ரூ.100 மற்றும் ரூ.200
ஏர்டெல் நிறுவனத்தின் தற்போதைய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் போதுமான அளவு டேட்டாவை வழங்குகின்றன, பின்புஇந்த திட்டங்களில் ரோல்ஓவர் வசதியும் உள்ளது. இதுதவிர குறிப்பிட்ட திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட டேட்டா வரம்பைமுன்கூட்டியே காலி செய்பவர்களுக்கு டேட்டா ஆட் ஆன் திட்டங்களையும் வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம், அதுதான் ரூ.100 மற்றும் ரூ.200 என்கிற விலையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இந்த திட்டங்கள் ஆக்டிவ் ஆக உள்ள திட்டத்தின் மேல் 35வரையிலான கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.

இப்போது ஏர்டெல் அதன் பயனர்களுக்கு நான்கு போஸ்ட்பெய்ட் திட்டங்களை மட்டுமே வழங்குகிறது, ரூ. ரூ.499, ரூ.749, ரூ.999 மற்றும் ரூ.1,599 திட்டம். சில வட்டங்களில், ரூ.349 மற்றும் ரூ.399 என்கிற நுழைவு நிலை போஸ்ட்பெய்ட் திட்டங்களையும் கொண்டுள்ளது.

35ஜிபி அளவிலான டேட்டா
அதாவது ஏர்டெல்லின் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ரூ.499-ல் தொடங்கும், அதே வேளையில், அதன் டேட்டா ஆட் ஆன்பேக்குகள் ரூ.100என்கிற ஆரம்ப விலையில் கிடைக்கின்றன. ஏர்டெல்லின் முதல் டேட்டா ஆட்-ஆன் திட்டமான ரூ.100திட்டமானது 15ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. அதேநேரத்தில் ரூ.200 ஆட்-ஆன் பேக் ஆனது 35ஜிபி
அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

ரோல் ஓவர் செய்ய முடியாது
ஆனால் இந்த கூடுதல் டேட்டாவை ரோல் ஓவர் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது, சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் அடுத்த பில் சுழற்சிக்கு முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்று அர்த்தம்.


Click it and Unblock the Notifications