ரூ.399 மட்டுமே: ஏர்டெல் வழங்கும் அட்டகாச போஸ்ட்பெய்ட் திட்ட சலுகைகள்!

|

ஏர்டெல் தனது போஸ்ட்பெய்ட் திட்ட பட்டியலில் சமீபத்தில் ரூ.399 திட்டம் இணைக்கப்பட்டது. ஏர்டெல் வழங்கும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் மற்றும் அதில் கிடைக்கும் சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

இணைய சேவை பிரதானம்

இணைய சேவை பிரதானம்

ஆன்லைன் வகுப்புகள், வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, வீடியோ ஸ்ட்ரீமிங் என பல தேவைகளுக்கு இணைய சேவை பிரதானமாக உள்ளது. இதன்காரணமாக போஸ்ட்பெய்ட் திட்டங்கள் குறித்து பலரது கவனம் திரும்பி வருகிறது. ஏர்டெல் தனது போஸ்ட்பெய்ட் திட்ட பட்டியலில் சமீபத்தில் ரூ.399 திட்டம் இணைக்கப்பட்டது. ரூ.399 திட்டமானது ஏணைய வட்டங்களில் தற்போது கிடைக்கிறது.

40ஜிபி டேட்டா, வரம்பற்ற குரலழைப்பு

40ஜிபி டேட்டா, வரம்பற்ற குரலழைப்பு

ரூ.499-ல் தொடங்கும் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் அமேசான் பிரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் சேவைகளை வழங்குகின்றன. ஏர்டெல் ரூ.399 திட்டத்தில் 40ஜிபி டேட்டா, வரம்பற்ற குரலழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தின் மூலம் விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமி இலவச சந்தாக்களை வழங்குகிறது. அதுமட்டுமின்றி ஏர்டெல் ஒரு வருடத்திற்கான ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம் சந்தாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் கூடுதல் இணைப்புகளோ அல்லது ஓடிடி நன்மைகளோ கிடைக்கவில்லை.

ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டம்

ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பயனர்களுக்கு ஸ்ட்ரீமிங் நன்மைகள் கிடைக்கின்றன. இந்த திட்டம் அமேசான் பிரைமுக்கான ஒரு வருட சந்தா, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்கான ஒரு வருட விஐபி சந்தாவை வழங்குகிறது. ரூ.499 திட்டத்தில் 75 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரலழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் விங்க் மியூசிக், ஷா அகாடமி மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம் சந்தா ஆகிய அணுகல் ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இலவச ஹலோடியூன்கள் மற்றும் ஃபாஸ்ட்டேக் சேவைகளுக்கு ரூ.150 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ரூ.749 போஸ்ட்பெய்ட் திட்டம்

ரூ.749 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.749 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பயனர்கள் 125 ஜிபி டேட்டாவை பெறுவார்கள். இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 8 கூடுதல் இணைப்புகள் வழங்கப்படுகிறது. ஓடிடி தளங்களுக்கான அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம்

ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டமானது 4ஜி வேகத்தில் 150 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் வரம்பற்ற குரலழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஏர்டெல் கூடுதலாக 8 இணைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் மேலே உள்ள திட்டங்களை போன்ற உள்ள அனைத்து கூடுதல் சலுகைகளும் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.1599 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.1599 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.1599 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பயனர்களுக்கு வரம்பற்ற டேட்டா 4ஜி வேகத்தில் கிடைக்கிறது. இதில் வரம்பற்ற குரலழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. ஏர்டெல் ரூ.1599 திட்டத்தில் ஸ்ட்ரீமிங் நன்மைகளும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் சந்தாவுக்கான ஒரு வருட சந்தா, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்கான விஐபி சந்தா, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம் ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஒரு வருடத்திற்கான விங்க் மியூசிக் சந்தாக்கள் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Airtel Offers Postpaid Plans Starting From rs.399: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X