Home
News

முழுசா 1 வருடம்.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. அள்ளி கொடுக்கும் Airtel.. மிஸ் பண்ணாதீங்க!

ஜியோ நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் புதிய முயற்சிகளைச் செயல்படுத்து வருகிறது ஏர்டெல் (Airtel) நிறுவனம். சமீபத்தில் கூட ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்-களை தடுக்கும் வகையில் ஏஐ அம்சத்தை அறிமுகம் செய்தது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) ஆற்றல்பெற்ற ஸ்பேம் கண்டறியும் அமைப்பு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்குப் பெரிய நிவாரணம் வழங்கியுள்ளது என்றே கூறலாம்.

அதேபோல் இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் மூன்று திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த மூன்று திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

முழுசா 1 வருடம்.. அள்ளி கொடுக்கும் Airtel.. மிஸ் பண்ணாதீங்க!

ஏர்டெல் ரூ.1999 ப்ரீபெய்ட் பிளான் (Airtel rs 1999 prepaid plan) ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் மொத்தம் 24ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படும். பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் உள்ளது.

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), விங்க் மியூசிக் (Wynk Music) போன்ற சலுகைகள் இந்த ஏர்டெல் ரூ.1999 திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக அழைப்பு நன்மைகள் மட்டும் எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3599 ப்ரீபெய்ட் பிளான் (Airtel rs 3599 prepaid plan) அனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைந்துவிடும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் கிடைக்கும். தினமும் 100 எஸ்எம்எஸ் , அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), விங்க் மியூசிக் (Wynk Music), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5g data) போன்ற சலுகைகளை இதில் உள்ளது.

முழுசா 1 வருடம்.. அள்ளி கொடுக்கும் Airtel.. மிஸ் பண்ணாதீங்க!

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் பிளான் (Airtel Rs 3999 prepaid plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இதில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (disney + Hotstar) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), விங்க் மியூசிக் (Wynk Music), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data) போன்ற போன்ற சலுகைகள் இந்த திட்டம் மூலம் நாம் பெறமுடியும்.

photo credit: vyapaarjagat

Best Mobiles in India

English summary
Airtel offers one year validity with unlimited offers across three prepaid plans: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X