Home
News

பார்த்து கத்துக்கோங்க அம்பானி.. சொந்த OTT-ஐ கட் பண்ண Jio எங்கே.. இலவச Netflix-ஐ கொடுக்கும் Airtel எங்கே!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனமானது அதன் ப்ரீபெய்ட் சேவையின் கீழ் உள்ள பல திட்டங்களில் முக்கிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ,249 திட்டத்தில் இருந்து 365 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.3599 திட்டம் வரையிலாக, அனைத்து ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்தும் இலவச ஜியோசினிமா (JioCinema) சந்தாவை நீக்கியுள்ளது

மேற்கண்ட வரம்பில் உள்ள திட்டங்கள் ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இரண்டு இலவச ஆப் சேவைகளை மட்டுமே கூடுதல் நன்மைகளாக வழங்குகின்றன. ஜியோ சினிமா சந்தா இல்லை என்றால் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா இல்லை என்று அர்த்தம். நினைவூட்டும் வண்ணம் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒன்றிணைக்கப்பட்டே ஜியோ ஹாட்ஸ்டார் உருவாகியுள்ளது.

சொந்த OTT-ஐ கட் பண்ண Jio எங்கே.. Netflix-ஐ கொடுக்கும் Airtel எங்கே!

இனிமேல் ரூ.195 மற்றும் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே அல்லது ஜியோஹாட்ஸ்டார் சந்தா திட்டங்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இந்த ஓடிடி சேவை அணுக கிடைக்கும். இப்படி சொந்த ஓடிடி நன்மையை நீக்கிய ஜியோ ஒருபக்கம் இருக்க, ஏர்டெல் நிறுவனமானது இருப்பதிலேயே பிரபலமான ஓடிடி நன்மையை இலவசமாக வழங்குகிறது.

அது நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா ஆகும். இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் வரும் 2 போஸ்ட்பெய்டு மொபைல் திட்டங்களை தன்வசம் கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி நெட்பிளிக்ஸ் ஆனது உலகளவில் மற்றும் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஓவர்-தி-டாப் தளங்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் அணுகக்கூடிய மிகவும் விலையுயர்ந்த ஓடிடி தளமாகவும் உள்ளது. ஆனால் 2 ஏர்டெல் திட்டங்கள் இதை இலவசமாக வழங்குகிறது.

01. பாரதி ஏர்டெல் ரூ.1399 போஸ்ட்பெய்டு மொபைல் திட்டம் (Bharti Airtel Rs 1399 Postpaid Mobile Plan): ஏர்டெல்லின் இந்த போஸ்ட்பெய்டு மொபைல் திட்டம் 4 சிம் கார்டுகளுடன் வருகிறது. இது ஒரு பேமிலி பிளான் ஆகும். இதன்கீழ் பயனர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் ப்ரைமரி சிம்மிற்கு 150ஜிபி டேட்டா; கூடுதல் சிம்களுக்கு (ஒவ்வொரு சிம்மிற்கும்) 30 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கும்.

இந்த திட்டத்துடன் நெட்பிளிக்ஸ் பேசிக் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடவே இலவச ஆப்பிள் டிவி+, ஆப்பிள் மியூசிக், ஆறு மாதங்களுக்கு அமேசான் பிரைம் மொபைல், ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் போன்ற கூடுதல் ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது. மேலும் ப்ளூ ரிப்பன் பேக் நன்மை, விஐபி சேவை, அப்பல்லோ 24|7 சர்க்கிள் மற்றும் இலவச ஹலோடியூன்ஸ் ஆகியவைகளும் கிடைக்கும்.

02. பாரதி ஏர்டெல் ரூ.1749 போஸ்ட்பெய்டு மொபைல் திட்டம் (Bharti Airtel Rs 1749 Postpaid Mobile Plan): ஏர்டெல்லின் இந்த போஸ்ட்பெய்டு மொபைல் திட்டம் 5 சிம் கார்டுகளுடன் வருகிறது. இதுவும் ஒரு பேமிலி பிளான் ஆகும். இதன்கீழ் பயனர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் ப்ரைமரி சிம்மிற்கு 200 ஜிபி டேட்டா; கூடுதல் சிம்களுக்கு (ஒவ்வொரு சிம்மிற்கும்) 30 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கும்.

இந்த திட்டத்துடன் நெட்பிளிக்ஸ் ஸ்டாண்டர்ட் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடவே இலவச ஆப்பிள் டிவி+, ஆப்பிள் மியூசிக், ஆறு மாதங்களுக்கு அமேசான் பிரைம் மொபைல், ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் போன்ற கூடுதல் ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது. மேலும் ப்ளூ ரிப்பன் பேக் நன்மை, விஐபி சேவை, அப்பல்லோ 24|7 சர்க்கிள் மற்றும் இலவச ஹலோடியூன்ஸ் ஆகியவைகளும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel offers most expensive OTT Platform Netflix For Under These 2 Postpaid Mobile Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X