ஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும் திட்டம் அறிமுகம்.!

|

ஏர்டெல் நிறுவனம், அதன் போட்டியாளர்களை எதிர்க்கும் மிகப்பெரிய முயற்சியொன்றில் களமிறங்கியுள்ளது. இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமென்ற பெயரை மட்டுமே தக்கவைத்து கொண்டிருக்கும் ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களையும் முன்பை போல் தக்கவைத்துக்கொள்ள மாபெரும் டேட்டா மற்றும் வாய்ஸ் திட்டமொன்றை அறிவித்துள்ளது.

ஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும் திட்டம்.!

அதிக அளவிலான தரவு நுகர்வு கொண்ட பயனர்களை இலக்காகக் கொண்டுள்ள இந்த திட்டமானது மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும். ப்ரீபெயிட் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த புதிய திட்டத்தின் விலை மற்றும் இதர நன்மைகளை பொறுத்தமட்டில்..

கிட்டத்தட்ட 1 ஆண்டு காலம்.!

கிட்டத்தட்ட 1 ஆண்டு காலம்.!

மொத்தம் 360ஜிபி அளவிலான டேட்டாவுடன் வர்மபற்ற இலவச குரல் அழைப்பு நன்மைகளும் இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 360 நாட்கள் ஆகும், கிட்டத்தட்ட 1 ஆண்டு காலம்.!

ஒரே நாளில் கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.!

ஒரே நாளில் கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.!

இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் தரவைப் பயன்படுத்துவதில் எந்த விதமான தினசரி வரம்பும் இல்லை என்பதால் மொத்த 360 ஜிபி டேட்டாவை நீங்கள் ஒரே நாளில் கூட பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது 360 நாட்களுக்குள் அதைப் பயன்படுத்தலாம். ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டமானது ரூ.3,999/- ஆகும்.

மாதம் ரூ.334/-என்ற செலவில் 25ஜிபி.!

மாதம் ரூ.334/-என்ற செலவில் 25ஜிபி.!

ஒரு சிறிய கணக்கு போட்டுப்பார்த்தால் இது ஒரு மோசமான திட்டம் அல்ல என்பதை நீங்களே உணர்வீர்கள். வருடம் ரூ.3,999/- என்றால் மாதம் ரூ.334/-என்ற செலவில் 25ஜிபி அவளிவான 4ஜி டேட்டா பெறுவீர்கள்வ உடன் வழக்கமான வரம்பற்ற குரல் அழைப்புகளையும், எஸ்எம்எஸ்களையும் பெறலாம்.

சமீபத்தில் திருத்தப்பட்ட ரூ.349/- திட்டம்.!

சமீபத்தில் திருத்தப்பட்ட ரூ.349/- திட்டம்.!

மாதந்தோறும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரீசார்ஜ்களை நிகழ்த்துவதற்கு ஏர்டெல் நிறுவனத்தின் இந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பதொன்றும் அவ்வளவு பெரிய முட்டாள்தனமான முடிவாக இருக்காது என்றே நம்புகிறோம். ஒரு ஆண்டு செல்லுபடியாகும் ரீசார்ஜ் செய்ய விருப்பமில்லை மாதந்தோறுமே ரீசார்ஜ் செய்ய விருப்பம்ஏ என்பவர்கள் சமீபத்தில் திருத்தப்பட்ட ரூ.349/- திட்டத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

நாள் ஒன்றிருக்கு 1.5ஜிபி.!

நாள் ஒன்றிருக்கு 1.5ஜிபி.!

தற்போது கிடைக்கும் ஏர்டெல் ரூ.349/- பேக் ஆனது முன்பு போலல்லாமல், இப்பொழுது 1.5ஜிபி அளவிலான டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை நாள் ஒன்றிருக்கு வழங்குகிறது. கிட்டத்தட்ட ரூ.3,999/- திட்டத்தின் மாதாந்திர செலவு கணக்கோடு ஒற்றுப்போகும் இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது தான் ஒரே வித்தியாசம்.

ரூ.349/- திட்டத்திற்கு எதிரான திட்டங்கள்.?

ரூ.349/- திட்டத்திற்கு எதிரான திட்டங்கள்.?

மற்றபடி, விலை மற்றும் நன்மைகள் ஆகியவைகளில் இரண்டு திட்டங்களும் சரிக்கு சமமாக இதர நிறுவனங்களை விட அதிகமாகவே வழங்குகிறது. இருப்பினும் கூட அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349/- திட்டத்திற்கு எதிரான ஒரு சில திட்டங்கள் உள்ளன.

மொத்தம் 49ஜிபி அளவிலான டேட்டா.!

மொத்தம் 49ஜிபி அளவிலான டேட்டா.!

குறிப்பாக அதன் ரூ.309/- திட்டத்தை கூறலாம். 49 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டமானது இலவச வரம்பற்ற அழைப்புகள் (உள்ளூர் மற்றும் எஸ்டிடி) மற்றும் நாள் ஒன்றிக்கு 1 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது. 1ஜிபி வரம்பை அடைந்த பிறகு இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

மொத்தம் 70ஜிபி அளவிலான டேட்டா.!

மொத்தம் 70ஜிபி அளவிலான டேட்டா.!

ரிலைன்ஸ் ஜியோவின் மற்றொரு திட்டமான ரூ.399/- பேக்கும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349/-கு போட்டியான ஒரு திட்டம்தான். இது 70 நாட்கள் செல்லுபடியாகும். அதாவது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா என மொத்தம் 70ஜிபி அளவிலான டேட்டாவுடன் வரம்பற்ற எஸ்எம்எஸ் மற்றும் பிற பிரீமியம் ஜியோ பயன்பாடுகள் மற்றும் சேவைகளையும் அணுக வழிவகுக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel offers massive 300GB data, unlimited voice calls for 360 days in new plan; full details here. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X