ஏர்டெல் வழங்கும் ரூ.4 லட்சம் வரையிலான நன்மை! லைஃப் மேட்டர் சார் மிஸ் பண்ணாதீங்க!

|

பாரதி ஏர்டெல் நிறுவனம் அதன் இரண்டு திட்டங்களின் கீழ் தனது பயனர்களுக்கு சுமார் ரூ.4 லட்சம் வரையிலான லைஃப் இன்சூரன்ஸ் நன்மையை வழங்க முன்வந்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதன் புதிய நன்மை திட்டத்தை அதிகமாக விளம்பரம் செய்து வருகிறது.

புதிய இரண்டு திட்டங்களின் கீழ் 4 லட்சம் வரை நன்மை

புதிய இரண்டு திட்டங்களின் கீழ் 4 லட்சம் வரை நன்மை

பாரதி ஏர்டெல் நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் உள்ள அதன் சந்தாதாரர்களுக்கு ரூ.4,00,000 வரையிலான லைஃப் இன்சூரன்ஸ் நன்மையை வழங்குகிறது. இந்த லைஃப் இன்சூரன்ஸ் ஏர்டெல்லின் ரூ.179 ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர் மற்றும் ரூ.279 எஸ்.டி.வி என்ற 2 திட்டங்கள் மூலம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஏர்டெல் பயனர்களின் யாருக்கெல்லாம் இந்த நன்மை கிடைக்கும் என்று பார்க்கலாம்.

யாருக்கெல்லாம் இந்த காப்பீடு கிடைக்கும்

யாருக்கெல்லாம் இந்த காப்பீடு கிடைக்கும்

இந்த இரண்டு திட்டங்களின் வழியாக அணுக கிடைக்கும் லைஃப் இன்சூரன்ஸ் நன்மையானது 18 வயது முதல் 55 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும், 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நன்மை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த இரண்டு திட்டங்களில் ஏதேனும் ஒரு திட்டத்தைத் தேர்வு செய்யும்பொழுது இந்த லைஃப் இன்சூரன்ஸ் நன்மையைப் பெறுவார்கள்.

மாயன் சொன்ன பூமியின் இறுதிநாள் 2020 தான்! 8 வருடங்களுக்கு பிறகு நம்பமுடியாத கணக்கு!மாயன் சொன்ன பூமியின் இறுதிநாள் 2020 தான்! 8 வருடங்களுக்கு பிறகு நம்பமுடியாத கணக்கு!

முக்கிய குறிப்பு: இதை மட்டும் மறக்காதீங்க

முக்கிய குறிப்பு: இதை மட்டும் மறக்காதீங்க

ஏர்டெல் பயனர்களுக்கு ஒரு முக்கிய குறிப்பு, ஏர்டெல் வழங்கும் இந்த லைஃப் இன்சூரன்ஸ் உங்களுக்கு முழுமையாக வேண்டும் என்றால் நீங்கள் இப்பொழுது தேர்வு செய்யும் திட்டத்தைத் தொடர்ந்து 12 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த இரண்டு திட்டங்களில் நீங்கள் தேர்வு செய்யும் ஒரு திட்டத்தை ஒரு வருடத்திற்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் மட்டுமே இந்த லைஃப் இன்சூரன்ஸ் நன்மை உங்களுக்கு கிடைக்கும்.

ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை

ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை

ஏர்டெல் ரூ.179 எஸ்.டி.வி திட்டத்தின் கீழ் 2 ஜிபி அதிவேக டேட்டா, அனைத்து நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற மற்றும் 300 எஸ்எம்எஸ் என 28 நாட்கள் வேலிடிட்டியுடன் செல்லுபடியாகிறது. இந்த திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பாரதி ஆக்சா ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ரூ. 2 லட்சம் வரையிலான லைஃப் இன்சூரன்ஸ் நன்மையை வழங்குகிறது. இந்த சலுகை இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து ஏர்டெல் பயனர்களுக்கும் செல்லுபடியாகும்.

அல்டிமேட் சென்டிமென்ட்., கண்ணீர் வடித்த டெலிவரி பாய்: மனசு கேட்காத வழிப்பறி திருடர்கள்!- இதோ வீடியோ!அல்டிமேட் சென்டிமென்ட்., கண்ணீர் வடித்த டெலிவரி பாய்: மனசு கேட்காத வழிப்பறி திருடர்கள்!- இதோ வீடியோ!

ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை

ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை

ஏர்டெல்லின் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் உங்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற மற்றும் 100 எஸ்எம்எஸ் என 28 நாட்கள் வேலிடிட்டியுடன் செல்லுபடியாகிறது. இந்த திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, எச்.டி.எஃப்.சி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சுமார் ரூ.4,00,000 வரையிலான காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. இந்த சலுகை இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து ஏர்டெல் பயனர்களுக்கும் செல்லுபடியாகும்.

லைஃப் இன்சூரன்ஸ்

லைஃப் இன்சூரன்ஸ்

இரண்டு திட்டங்களின் லைஃப் இன்சூரன்ஸ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் பொதுவாக ஒன்றாகத் தான் இருக்கிறது. இரண்டு திட்டங்களின் செல்லுபடி காலம் நிறைவடைவதற்கு முன்னரே பயனர்கள் மாதாந்திர ரீசார்ஜ்-ஐ சரியாகச் செய்திருக்க வேண்டும்.

 30 நாட்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும்

30 நாட்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும்

எச்.டி.எஃப்.சி ஆயுள் காப்பீட்டுக் கொள்கையின் கீழ் உரிமைகோரல்கள் ஆனது திட்ட உறுப்பினர் இறந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். முக்கியமாக, இந்தக் கொள்கை தற்கொலை தவிர மற்ற வகையிலான மரணத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.

Best Mobiles in India

English summary
Airtel Offers Life Insurance Worth Of Rs 4 Lakh With Rs 279 Prepaid Plan : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X