Airtel வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: Jio-வுக்கு போட்டியாக Airtel வழங்கும் இலவச சலுகை!
ஏர்டெல் நிறுவனம் தங்களது போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை வழங்கும் சலுகையை அறிவித்துள்ளது.

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகிறது. அவை அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் விதமாகவே இருக்கிறது. இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாக திகழ்பவை ஜியோ, ஏர்டெல், விஐ(வோடபோன் ஐடியா).

மலிவு விலையில் திட்டங்கள் வழங்கும் ஜியோ
ஜியோ அறிமுகம் செய்த குறுகிய காலங்களிலேயே மிகப் பெரிய வளர்ச்சி அடைந்தது. அதற்கு காரணம் ஜியோ மலிவு விலையில் வழங்கும் சலுகைகள். ஜியோவுக்கு இணையான திட்டங்களை பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது.

பிரதான பயன்பாடாக ஓடிடி தளங்கள்
இணைய பயன்பாட்டு வரம்பு வழங்குவதில் ஒவ்வொரு நிறுவனங்களுக்கு வித்தியாசம் என்றாலும் சமீபகாலமாக ஓடிடி பயன்பாடு என்பது முக்கியமாக இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் பூட்டிய நிலையில் உள்ளது. இதனால் ஏணைய திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. அதோடு ஓடிடி தளங்களில் வெளியாகும் சீரிஸ்கள், இளைஞர்கள் உட்பட அனைவரையும் கவர்ந்து வருகிறது.

ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மற்றும் நெட்பிலிக்ஸ்
ஓடிடி சேவையிலும் ஜியோவை ஒப்பிடுகையில் பிற நிறுவனங்கள் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. ரிலையன்ஸ் தங்களது திட்டங்களுடன் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மற்றும் நெட்பிலிக்ஸ் என பல ஓடிடி சேவைகளை திட்டங்களின் விலைக்கேற்ப வழங்குகிறது.

போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்கள்
இந்த நிலையில் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை இலவசமாக வழங்கும் புதிய சலுகையை நிறுவனம் அறிவித்துள்ளது. ஹாட்ஸ்டார் விஐபி உறுப்பினர் ரூ.399-க்கு கிடைக்கிறது. ஏர்டெல் ஹாட்ஸ்டார் விஐபி சலுகை வழங்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ஹாட்ஸ்டார் விஐபி சந்தா
ஏர்டெல் பிளாட்டினம் திட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்குகிறது. ஏர்டெல் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் குறித்து பார்க்கையில், ரூ.499, ரூ.749, ரூ.999 மற்றும் ரூ.1,599 திட்டங்கள் ஆகும். அதேபோல் பிராட்பேண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கையில் ரூ.999, ரூ.1,499 மற்றும் ரூ.3,999 திட்டங்கள் ஆகும்.

ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாடு
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இந்த சலுகைக்கு தகுதியுடையவர்களா என்பதை ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டின் கீழ் சென்று பார்க்கலாம். ஏர்டெல் ஆப்பில் ஏர்டெல் தேங்க்ஸ் என்ற தேர்வை கிளிக் செய்தால் இந்த சலுகை காண்பிக்கப்படும். அதேபோல் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இந்த இலவச சலுகையை ஒருமுறை மட்டுமே இலவசமாக பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications