ஏர்டெல் ஆப் வசதியில் வழங்கப்படும் அட்டகாச சலுகை.! அந்த சலுகை என்ன தெரியுமா?

|

அண்மையில் ஏர்டெல் நிறுவனம் தனது பிளாட்டினம் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி உறுப்பினர்களுக்கான இலவச அணுகலை வழங்கியது. இதை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் இன்னொரு புதிய சலுகையும் அறவித்துள்ளது அதைப் பற்றி சற்று விரவாகப் பார்ப்போம்.

கட்டணமின்றி மூன்று

ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் அதன் ஏர்டெல் தேங்க்ஸ் பயனர்கள் கூடுதல் கட்டணமின்றி மூன்று மாதங்களுக்கு யூடியூப் பிரீமியம் மெம்பர்ஷிப்பை அணுகும் ஒரு சலுகையையும் வழங்கி வருகிறது.

யூடியூப் பிரீமியம்

அதன்படி யூடியூப் பிரீமியம் என்பது யூடியூப் நிறுவனம் வழங்கும் ஒரு சிறப்பான சேவையாகும். இது யூடியூப்-இலிருந்து விளம்பரங்களை நீக்குகிறது, பின்பு யூடியூப் ஒரிஜினல்ஸ் மற்றும் யூடியூப் ம்யூசிக்கிற்கான இலவச அணுகலையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp மற்றும் ShareChat ஸ்டேட்டஸ் வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி ? சீக்ரெட் டிப்ஸ்.!WhatsApp மற்றும் ShareChat ஸ்டேட்டஸ் வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி ? சீக்ரெட் டிப்ஸ்.!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்த இலவச யூடியூப் சலுகைக்கு சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி இந்த சலுகையானதுதேர்ந்தெடுக்கப்பட்ட ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறோம். எனவே சில பயனர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது.

யனர்களுக்கு மட்டுமே

வெளிவந்த தகவலின்படி யூடியூப் பிரீமியம் சலுகை இந்தியாவில் உள்ள ஏர்டெல் பயனர்களுக்கு அக்டோபர் 22, 2020 முதல் ஏப்ரல் 21, 2021 வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை தற்போதைய யூடியூப் மியூசிக் பிரீமியம், யூடியூப் பிரீமியம், யூடியூப் ரெட் அல்லது Google Play மியூசிக் சந்தாவுடன் இணையாத பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

இல்லாமல் யூடியூப் பிரீமியத்தின்

அதேபோல் பயனர்கள் யூடியூப் பிரீமியம் ட்ரையல் அல்லது கடந்த காலங்களில் மேலே குறிப்பிட்ட எந்தவொரு சேவையிலும் சேர்ந்திருக்கக்கூடாது. பின்பு நீங்கள் இலவச ட்ரையல் செய்திருந்தால் அல்லது யூடியூப் மியூசிக் பிரீமியத்திற்கு சந்தா செலுத்தியிருந்தால் அல்லது தற்போது யூடியூப் மியூசிக் பிரீமியத்தின் சந்தாதாரராக இருந்தால், இந்த ஏர்டெல் சலுகையின் கீழ் யூடியூப் மியூசிக் அம்சங்கள் இல்லாமல் யூடியூப் பிரீமியத்தின் ட்ரையல் சேவையை மட்டுமே நீங்கள் அணுக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 ரூ.129 என்ற

குறிப்பாக தகுதியான பயனர்கள் 2021 மே 22-க்குள் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த ட்ரையல் காலத்தின் முடிவில் பயனர்களுக்கு தானகவே மாதத்திற்கு ரூ.129 என்ற நிலையான விலை வசூலிக்கப்படும். இருப்பினும் சந்தாதாரர்கள் மெம்பர்ஷிப்பை ரத்து செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர்டெல்

முன்பு குறிப்பிட்டபடி தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர்டெல் பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும். பின்பு அவர்கள் அதை ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டின் மூலம் மீட்டெடுக்க முடியும். ஏர்டெல் நிறுவனம் அதன் பயனர்களை trial code-களை கோரவும் அனுமதிக்கிறது. ஆனால் இந்நிறுவனம் குறிப்பிட்ட trial code-களை அனுப்ப ஆறு மாதங்கள் ஆகலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel Offers Free Youtube Premium Subscription For 3 Months : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X