Home
News

ஜியோ இலவச சலுகைகளை தவிடு பொடியாக்கியது ஏர்டெல்.!

இரண்டு புதிய தொகுக்கப்பட்ட ப்ரீபெய்ட் வட்ட சலுகையின்கீழ் நாடு முழுவதுதிலுமான இலவச குரல் அழைப்புகள் மற்றும் தரவு நன்மைகள் ஆகிய இரண்டுமே கிடைக்கும்

By Muthuraj

இந்திய தொலைத்தொடர்பு துறையிலேயே ரிலையன்ஸ் ஜியோ உடனான போட்டியில் சரிக்கு சமமாக ஈடுகொடுப்பது ஏர்டெல் நிறுவனம் தான் என்பதில் சந்தேகேமே கிடையாது. ரிலிங்ஸ் ஜியோ அறிமுகமான ஆரம்பம் முதலே சுதாரித்துக் கொண்ட ஏர்டெல் அதன் கைவசம் இருக்கும் வாடிக்கையாளர்களை ஜியோவின் பக்கம் தாவி விடாத வண்ணம் பல விலைகுறைப்பு, சலுகைகள், புதிய திட்டங்கள் ஆகியவைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

அப்படியாக இன்று (வியாழக்கிழமை) ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவை நீடிப்பிற்கு சரியான பதிலடி கொடுக்கும் நோக்கில் இரண்டு வகையான ப்ரீபெயிட் வட்ட வாடிக்கையாளர்களுக்கான அதிரடி திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு புதிய தொகுக்கப்பட்ட ப்ரீபெய்ட் வட்ட சலுகையின்கீழ் நாடு முழுவதுதிலுமான இலவச குரல் அழைப்புகள் மற்றும் தரவு நன்மைகள் ஆகிய இரண்டுமே கிடைக்கும்.

விலையில் மாற்றம்

விலையில் மாற்றம்

ஏர்டெல் நிறுவனம் இந்த சலுகை சார்ந்த தில்லி வட்ட விலையை மட்டும் வழங்கியுள்ளது மற்றும் பிற ப்ரீபெய்ட் வட்டங்களுக்கு ஏற்றபடி விலையில் மாற்றம் ஏற்படும் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உள்ளூர் மற்றும் வெளியூர்

உள்ளூர் மற்றும் வெளியூர்

இந்த புதிய ரூ.345/- பேக் மூலம் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் எந்த நெட்வொர்க் உடனாகவும் குரல் அழைப்புகளை (உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் இரண்டுமே) இலவசமாக நிகழ்த்திக் கொள்ளலாம். உடன் இந்த ரூ.345/- ப்ரீபெய்ட் பேக் அனைத்து 1ஜிபி அளவிலான 4ஜி தரவையும் வழங்குகிறது.

கூடுதலாக 50 எம்பி

கூடுதலாக 50 எம்பி

"வெறுமனே வலைத்தளங்களில் தேடுதல் நிகழ்த்துதல் மற்றும் அதிக அளவிலாம் டேட்டா தேவையில்லாத சமூக ஊடக பயன்பாடுகளை அணுகல்" ஆகியவைகளை நிகழ்த்தும் மொபைல்களுக்கு இந்த பேக் கூடுதலாக 50 எம்பி அளவிலானடேட்டாவை வழங்குகிறது.

வரம்பற்ற அழைப்பு

வரம்பற்ற அழைப்பு

மறுபுறம், ஏர்டெல் வழங்கும் ரூ.145/- ப்ரீபெய்ட் பேக் ஆனது வாடிக்கையாளர்களுக்கு மற்ற ஏர்டெல் பயனர்கள் உடனாக இந்தியா முழுவதிலுமான வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது.உடன் இந்த பேக் 4ஜி கருவிகளுக்கு 300எம்பி தரவும் மற்ற கருவிகளுக்கு (அடிப்படை மொபைல் போன்களுக்கு) 50எம்பி அளவிலான தரவும் வழங்குகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

28 நாட்கள் செல்லுபடியாகும்

28 நாட்கள் செல்லுபடியாகும்

ரூ.345/- மற்றும் ரூ.145/- ஆகிய இரண்டு ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களும் 28 நாட்கள் செல்லுபடியாகும். உடன் குறிப்பிட்டபடி, இரண்டு திட்டங்களின் விலையும் வெவ்வேறு வட்டங்களில் மாறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

எந்த நெட்வொர்க் உடனாகவும் அன்லிமிடெட் கால்ஸ், இலவச 1ஜிபி தரவு.!

Best Mobiles in India

English summary
Airtel Offers Free Voice Calls to Anywhere in India. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X