ஏர்டெல்: மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ்.!
மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்க பட்ட மக்களுக்கு இலவச டேட்டா சேவை மற்றும் வாய்ஸ் கால்ஸ் சேவையை வழங்கியுள்ளது.
கேரளாவில் இயல்பு நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை வெள்ளத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஐ தாண்டி உள்ளது. கேரளா மக்களின் நிலை ஆபத்தில் உள்ளதை உணர்த்த ஏர்டெல் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.

கேரளா ஏர்டெல் நிறுவனம் வெள்ளம் காரணமாக ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியிருக்கும் மக்களுக்கு உதவ முன்வந்துள்ளது. மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்க பட்ட மக்களுக்கு இலவச டேட்டா சேவை மற்றும் வாய்ஸ் கால்ஸ் சேவையை வழங்கியுள்ளது.
கேரளா ஏர்டெல் நிறுவனம், தனது அனைத்து ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குத் தானாக ரூ.30 க்கான டாக் டைம் வழங்கும் படி செய்துள்ளது. தங்களின் அன்பார்ந்த நபர்களைத் தொடர்புகொள்ளவும், உதவிக்கு தொடர்கொள்ளவும் இந்தத் தொகை உதவுமென்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்துடன் 1ஜிபி இலவச டேட்டா சேவையையும் பயனர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த இலவச டேட்டா சேவை 7 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது.
தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு பில் செலுத்தும் தேதியின் நாட்களை அதிகரித்துள்ளது. போஸ்ட்பெய்டு பில்களை அடுத்த மாதம் கட்டிக்கொள்ளலாம். இத்துடன் பில் கட்டப்படாத எண்களுக்கும் சேவை துண்டிக்கப்படாது எனவும் ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.
பொது இடத்தில் வைஃபை சேவை மற்றும் வாய்ஸ் கால்ஸ் சேவை பெற விசாட்(VSAT) சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் கேரளா சுற்றியுள்ள அணைத்து ஏர்டெல் பிளாக்ஷிப் ஸ்டோர்களில் மொபைல் போன்களை சார்ஜிங் செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications