Home
News

Airtel பயனர்களே என்ஜாய்: Amazon பிரைம், டிஸ்னி+ Hotstar இனி இலவசம்- இதை செய்தால் போதும்!

ஓடிடி பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு திரைப்படங்கள், வெப் சீரிஸ் போன்றவைகளை வெளியிட்டு வருகிறது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போல் ஓடிடி பயன்பாடுகளும் தங்களது சந்தாதாரர்களின் எண்ணிகையை அதிகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இலவசமாக ஓடிடி பயன்பாடுகள்

இலவசமாக ஓடிடி பயன்பாடுகள்

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது சந்தாதாரர்களுக்கு குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களின் கீழ் ஓடிடி பயன்பாடுகளை இலவசமாக வழங்கி வருகிறது. இதிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஆஹா தமிழ் போன்ற ஓடிடி தளங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைக்கு ஏற்ப இலவசமாக வழங்குகிறது.

இரண்டாவது இடத்தில் இருக்கும் ஏர்டெல்

இரண்டாவது இடத்தில் இருக்கும் ஏர்டெல்

இந்தியாவின் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதிக வாடிக்கையாளர்கள் உடன் ஜியோ இந்தியாவில் முதல் தொலைத் தொடர்பு நிறுவனமாக இருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஏர்டெல் இருக்கிறது. ஏர்டெல் தங்களது பயனர்களுக்கு குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களில் ஓடிடி சலுகையை இலவசமாக வழங்குகிறது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச சந்தா

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச சந்தா

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச சந்தாவை மூன்று மாதங்களுக்கு பதிலாக ஒரு வருடத்திற்கு இலவசமாக பெறுகிறார்கள். பாரதி ஏர்டெல் அதன் இணை எதிரியான ரிலையன்ஸ் ஜியோவுடன் ஒப்பிடும் போது தனது ரீசார்ஜ் திட்டங்களுக்கு கட்டணங்களை அதிகமாகவே வசூலிக்கிறது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் திருப்தி படுத்தும் வகையில் அதீத இணைய வேகம், இலவச ஓடிடி பயன்பாடுகளை ஏர்டெல் வழங்குகிறது.

ரூ.399 பாரதி ஏர்டெல் திட்டம்

ரூ.399 பாரதி ஏர்டெல் திட்டம்

பாரதி ஏர்டெல்லில் ஓடிடி பயன்பாடுகளுடன் கிடைக்கும் மலிவு விலை திட்டத்தில் இது முதல் திட்டமாகும். இதன் விலை ரூ.399. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் மட்டுமே. இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பட்சத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான இலவச அணுகல் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

ரீசார்ஜ் திட்டத்தின் நன்மைகள்

ரீசார்ஜ் திட்டத்தின் நன்மைகள்

இந்த ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான அணுகல் மொபைலுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இந்த திட்டத்தில் Airtel Thanks நன்மைகளுக்கான அணுகலும் வழங்கப்படுகிறது.

பாரதி ஏர்டெல் ரூ.499 ரீசார்ஜ் திட்டம்

பாரதி ஏர்டெல் ரூ.499 ரீசார்ஜ் திட்டம்

ரூ.499 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம் குறித்து பார்க்கையில், இது முதலில் குறிப்பிடப்பட்ட திட்டத்தை விட ரூ.100 அதிகமாகும். இந்த திட்டத்தில் பயனர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான சந்தா ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் டேட்டா வரம்பு முடிந்த பிறகு அதன் வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும். இந்த திட்டத்திலும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகள் வழங்கப்படுகிறது.

ரூ.839 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம்

ரூ.839 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம்

ரூ.839 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான 3 மாத சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

ரூ.999 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம்

ரூ.999 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம்

ரூ.999 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தின் நன்மைகள் குறித்து பார்க்கையில், இந்த திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புடன் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் சந்தாக்கான இலவச அணுகல் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Offers Free Subscription For Amazon Prime, Disney+ Hotstar in Recharge plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X