இலவசமாக 4 ஜிபி டேட்டா கூப்பன் பெறுவது எப்படி? ஏர்டெல் பயனர்கள் நல்ல கவனிச்சுக்கோங்க..

|

இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களில் ஒன்றான ஏர்டெல், தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களுடன் இப்போது 4ஜிபி டேட்டா கூப்பன்களை தனது பயனர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நன்மையைப் பெற, ஏர்டெல் பயனர்கள் நிறுவனம் குறிப்பிட்டுள்ள அதன் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்து ஏதேனும் ஒரு திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறைப்படி பயனர்கள் எளிமையாக ரீசார்ஜ் செய்யும் போது மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இவர்களுக்கு மட்டும் இந்த 4 ஜிபி டேட்டாகூப்பன் இலவசமாக கிடைக்கும்

இவர்களுக்கு மட்டும் இந்த 4 ஜிபி டேட்டாகூப்பன் இலவசமாக கிடைக்கும்

டெலிகாம் ஆபரேட்டர் தனது ப்ரீபெய்ட் கட்டணத் திட்டங்களின் விலையை உயர்த்தியதை அடுத்து நிறுவனம் இந்த அறிவிப்பைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த டேட்டா கூப்பன்களை பெற, ஏர்டெல் ப்ரீபெய்ட் எண்ணை பயன்படுத்தும் பயனர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸ் மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று நிறுவனம் கூறியுள்ளது. வேறு இடங்களில் இருந்து ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டிற்குச் செல்லும்போது, ​​ரீசார்ஜ் பகுதியைக் காண்பீர்கள், மேலும் நீங்கள் ஆப் பேக்குகளைத் தட்ட வேண்டும்.

4G டேட்டா கூப்பனைப் பெற எந்த திட்டத்தை தேர்வு செய்வது?

4G டேட்டா கூப்பனைப் பெற எந்த திட்டத்தை தேர்வு செய்வது?

நீங்கள் அனைத்து திட்டங்களையும் உலாவலாம் மற்றும் 4G டேட்டா கூப்பனைப் பெற தேவையான ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். முறையே ஏர்டெல் இப்போது இந்த 4 ஜிபி டேட்டா கூப்பன் சலுகையை ரூ. 479, ரூ. 549 மற்றும் ரூ. 699 திட்டங்களில் மட்டுமே வழங்குகிறது. மேலே குறிப்பிட்டுள்ள சில திட்டங்களுடன் கூடிய 4ஜிபி டேட்டா கூப்பன்கள் தவிர, ஏர்டெல் 2 ஜிபி டேட்டா கூப்பன்களையும் தொகுக்கிறது. ரூ. 350 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 2ஜிபி டேட்டா கூப்பன்கள் கிடைக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

கயிறுடன் கட்டி போடப்பட்ட 1000 ஆண்டு பழமையான மம்மி.. என்ன காரணம்? இந்த மம்மி யாராக இருக்கும்?கயிறுடன் கட்டி போடப்பட்ட 1000 ஆண்டு பழமையான மம்மி.. என்ன காரணம்? இந்த மம்மி யாராக இருக்கும்?

ஏர்டெல் ரூ. 359 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ. 359 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல்லின் ரூ. 359 ப்ரீபெய்ட் திட்டம் 2ஜிபி டேட்டாவுடன் 2ஜிபி டேட்டா கூப்பன்களை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. ஏர்டெல் வழங்கும் ரூ. 479 ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா நன்மையை, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையுடன் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு போன்ற பலன்களை சேர்த்து வழங்குகிறது. இது 4 ஜிபி டேட்டா கூப்பன்களை இணைக்கும் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இது 56 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது.

ஏர்டெல் ரூ. 599 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ. 599 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் வழங்கும் ரூ. 599 ப்ரீபெய்ட் திட்டத்தில், 4ஜிபி டேட்டா கூப்பன் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா நன்மை, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் வருகிறது. இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், வின்க் மியூசிக் சந்தா, ஒரு வருடத்திற்கு ஷா அகாடமி மற்றும் ரூ.150 மதிப்பிலான FASTag கேஷ்பேக் நன்மை ஆகிவற்றை வழங்குகிறது.

தினமும் 3ஜிபி டேட்டாவுடன் கூடுதல் நன்மை வேண்டுமா? அப்போ இந்த 'Airtel' திட்டம் தான் சரி..தினமும் 3ஜிபி டேட்டாவுடன் கூடுதல் நன்மை வேண்டுமா? அப்போ இந்த 'Airtel' திட்டம் தான் சரி..

ஏர்டெல் ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டம்

கடைசியாக, எங்களிடம் ஏர்டெல் ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இந்த திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் 56 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்தத் திட்டம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் Amazon Prime அணுகலுடன் வருகிறது. மேலும் Disney+ ஹாட்ஸ்டார் சந்தாவும் இதில் உங்களுக்கு கிடைக்கிறது. ஏர்டெல் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து பாரதி ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது.

அதிரடியாக விலை அதிகரித்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்

அதிரடியாக விலை அதிகரித்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்

இதன் மூலம் வருவாயை ரூ. 200 ARPU (ஒரு பயனருக்கு சராசரி வருவாய்) அதிகரிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் நவம்பர் 26, 2021 முதல் அமலுக்கு வரும் என்று நிறுவனம் கூறியிருந்தது. அதன்படி, இப்போது புதிய விலையில் ஏர்டெல் திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வுக்கு முன் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. அதேபோல, ரூ. 359 ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை முன்பு ரூ. 298 ஆகவிருந்தது.

கடைசியில நீங்களுமா குருநாதா: ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்திய ஜியோ.! கவலையில் பயனர்கள்.!கடைசியில நீங்களுமா குருநாதா: ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்திய ஜியோ.! கவலையில் பயனர்கள்.!

டேட்டா வவுச்சர்களின் விலையும் அதிகரிப்பா?

டேட்டா வவுச்சர்களின் விலையும் அதிகரிப்பா?

ப்ரீபெய்ட் திட்டங்களைத் தவிர , ஏர்டெல் வழங்கும் டேட்டா வவுச்சர்கள் கூட விலை உயர்வைக் கண்டன. அதேபோல, ரூ. 48, ரூ. 98 மற்றும் ரூ. 251 டேட்டா வவுச்சர்கள் இப்போது ரூ. 58, ரூ. 118 மற்றும் ரூ. 301 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களும் முன்பு வழங்கிய அதே பலன்களைத் தக்கவைத்துக் கொள்ளும். ஆனால், அவற்றின் விலைகள் அதிக விலைக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நிறுவனம் இப்போது 4G டேட்டா கூப்பன்களை வழங்குவதால், எதிர்காலத்தில் இது மற்ற நன்மைகளையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Offers Free 4GB Data Coupons With Select Prepaid Plans Now : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X