சத்தமின்றி ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் நன்மையை வழங்கிய Airtel : என்ஜாய் செய்யும் பயனர்கள்.!
ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் நன்மையை வழங்கி உள்ளது. அதாவது முன்பு ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைத்தது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி கிடைத்துள்ளது. இப்போது ரூ.359 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 1 மாதம் வேலிடிட்டி கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.359 திட்டத்தின் நன்மைகள்
ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் Xstream mobile app அணுகல் இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது.
குறிப்பாக ஏர்டெல் ரூ.359 திட்டத்தில் இப்போது ஒரு மாதம் வேலிடிட்டி கிடைக்கும் என்பதால் கூடுதல் டேட்டா நன்மை கூட கிடைக்கும். எனவே ஏர்டெல் பயனர்கள் பட்ஜெட் விலையில் ஒரு நல்ல திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால் இந்த ஏர்டெல் ரூ.359 திட்டத்தைத் தேர்வு செய்வது மிகவும் நல்லது. மேலும் இப்போது ஏர்டெல் நிறுவனம் வழங்கும் சில அசத்தலான திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ 296 திட்டம்
ஏர்டெல் ரூ 296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 30 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்குத் தினசரி 100 எஸ்எம்எஸ் உடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. Apollo 24|7 Circle, FASTag இல் ரூ.100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music அணுகலும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.549 திட்டம்
ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டத்தில் Xstream mobile app அணுகல், இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.
ஏர்டெல் ரூ.839 திட்டம்
ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கிறது. இதுதவிர Wynk மியூசிக், இலவச Hellotunes, ரிவார்ட்ஸ்மினி சந்தா மற்றும் Apollo 24|7 Circle போன்ற கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் தற்போது இந்தியாவில் சில நகரங்களில் தனது 5ஜி சேவையை வழங்கி உள்ளது. விரைவில் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் தனது 5ஜி சேவையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக தொடர்ந்து பல அசத்தலான சலுகைகளை வழங்கி வண்ணம் உள்ளது ஏர்டெல்.


Click it and Unblock the Notifications