ரூ.1500க்கு அதிரடியாக சலுகை அறிவித்த ஏர்டெல்.!

இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த வந்த போதும், இந்நிலையில் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் வகையிலும், மற்ற நிறுவனங்களுக்கு மாறுவதை தடுக்கவும் ரூ.1500க்கு சலுகை அறி

|

ரூ.35க்கு குறைவாக ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களின் சேவையை நிறுத்துவதாக ஏர்டெல், ஐடியா, வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் அறிவித்தன.

இதற்கு டிராய் (இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

ரூ.1500க்கு அதிரடியாக சலுகை அறிவித்த ஏர்டெல்.!

மேலும் சேவை துண்டிக்க கூடாது என்றும் டிராய் அந்த நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த வந்த போதும், இந்நிலையில் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் வகையிலும், மற்ற நிறுவனங்களுக்கு மாறுவதை தடுக்கவும் ரூ.1500க்கு சலுகை அறிவித்து அதிரவிட்டுள்ளது.

ஜியோ வருகை:

ஜியோ வருகை:

இந்திய தொலைபேசி சந்தையில் ஜியோ வருகையாலும், அந்த நிறுவனம் வழங்கி வரும் பல்வேறு அதிரடியான சலுகைகளாலும் குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் பெற்றது.

ஏர்டெல், வோடாபோன், ஐடியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சிம்கார்டுகளை இரண்டாம் நிலையாகவும், அதாவது இன்கம்மிங்கு என்று வைத்துக் கொண்டனர். இதனால் அந்த நிறுவனங்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. மேலும் தொழிலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ரூ.35க்கு இன் கம்மிங் பிளான்:

ரூ.35க்கு இன் கம்மிங் பிளான்:

பிறகு இதைத்தொடர்ந்து, வோடாபோன், ஐடியா, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.35க்கு ரீசார்ஜ் செய்தால், தான் இன்கம்மிங் சேவை கூட வழங்குவோம். இல்லை என்றால் சேவையை நிறுத்துவதாகவும் அறிவித்தன.

 டிராய் கடும் எதிர்ப்பு:

டிராய் கடும் எதிர்ப்பு:

இந்நிலையில், ரூ.35க்கு கீழ் குறைவாக ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களின் சேவை நிறுத்த கூடாது என்று டிராய் எச்சரிக்கை விடுத்தது. மேலும், சேவை நிறுவத்து என்றால் 3 நாட்களுக்கு முன்பே வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

சலுகை அறிவிப்பு:

சலுகை அறிவிப்பு:

ஏர்டெல் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் புதிய போஸ்ட்பெயிட் பயனர்களை ஏர்டெல் சேவையில் சேர்த்து விடும் போது குறிப்பிட்ட ஏர்டெல் வாடிக்கையாளரின் மாதாந்திர கட்டணத்தில் இருந்து ரூ.150 மதிப்புள்ள தள்ளபடி கூப்பன்களை பெற முடியும்.

வெற்றிகரமாக நெட்வொர்க் மாறியதும், புதிய ஏர்டெல் வாடிக்கையாளருக்கும் இதே பலன்கள்: ரூ.50 மதிப்புள்ள மூன்று தள்ளுபடி கூப்பன்கள் கிடைக்கும். இந்த கூப்பன்கள் குறிப்பிட்ட வாடிக்கையாளர் லின்க் செய்திருக்கும் மை ஏர்டெல் செயலியில் தானாக கிரெடிட் செய்யப்பட்டு விடும். இதனை போஸ்ட்பெயிட் கட்டணம் செலுத்தும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரூ.1500 தள்ளுபடி அறிவிப்பு:

ரூ.1500 தள்ளுபடி அறிவிப்பு:

புதிய ஏர்டெல் இணைப்பு வெற்றிகரமாக ஆக்டிவேட் ஆனதும், பரிந்துரை செய்தவருக்கும் புதிய இணைப்பை பெற்றவருக்கும் 24 மணி நேரத்தில் தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படும். இந்த சலுகையை அதிகபட்சம் பத்து முறை பயன்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில் பயனர்களுக்கு மொத்தம் ரூ.1,500 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படுகிறது.

பெறுவது எப்படி?

பெறுவது எப்படி?

ஆன்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ். செயலியில் உள்ள மை ஏர்டெல் ஆப் சென்று ஏர்டெல் போஸ்ட்பெயிட் ரெஃபரல் (postpaid referral) சலுகையை பெற முடியும். சலுகையில் இணைய செயலியில் லாக்-இன் செய்து நோட்டிஃபிகேஷன் பகுதியில் காணப்படும் "Rs. 150 discount on your postpaid bill" ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

ஏர்டெல் நிறுவனங்கள்:

ஏர்டெல் நிறுவனங்கள்:

இந்த குறியீட்டை (ரெஃபரல் லின்க்) காப்பி செய்து, சமூக வலைதள பட்டன்கள் மூலம் பகிர்ந்து கொண்டோ அல்லது தானாகவோ சிலரை பரிந்துரை செய்யலாம். நீங்கள் அனுப்பும் லின்க்கை உங்களது நண்பர் கிளிக் செய்து அனைத்து வழிமுறைகளையும் பூர்த்தி செய்து, வெற்றிகரமாக ஏர்டெல் சேவையில் இணைந்து கொள்ளும் பட்சத்தில் உங்களுக்கும், புதிதாய் ஏர்டெல் சேவையில் இணைந்த நண்பருக்கும் தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படும்.

புதிய சலுகை ஏர்டெல்

புதிய சலுகை ஏர்டெல்

ஏர்டெல் அறிவித்திருக்கும் புதிய சலுகை ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள், ஏர்டெல் பிரீபெயிட், ஏர்டெல் பிராட்பேன்ட், ஏர்டெல் கார்ப்பரேட் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Offers Discount Coupons Worth Up to Rs 1500: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X