Home
News

Amazon Prime மற்றும் Disney+ Hotstar இலவசமாக வேண்டுமா? அப்போ இந்த Airtel பிளானை பாருங்க.!

இப்போது அணைத்து ரீசார்ஜ் திட்டங்களும் டேட்டா நன்மையை அதன் பயனர்களுக்காக வெவ்வேறு விலையில், வெவ்வேறு அளவில் வழங்கி வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. டேட்டா நன்மை என்பது இப்போது அனைவருக்கும் தேவையான ஒரு சேவையாகிவிட்டது. இதேபோல், இப்போது இந்தியாவில் OTT சேவைகளுக்கான தேவையும் மக்கள் மத்தியில் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. குறைப்பாக Amazon Prime மற்றும் Disney+ Hotstar சந்தாக்கள் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

 Amazon Prime மற்றும் Disney+ Hotstar சந்தா இலவசமாக வேண்டுமா?

Amazon Prime மற்றும் Disney+ Hotstar சந்தா இலவசமாக வேண்டுமா?

இதைத் தனியாக வாங்கினால் கூடுதல் செலவாகிறது என்பதனால் சிலர் இதை வாங்குவதற்குத் தயக்கம் காட்டினாலும், இந்த இரண்டு முக்கியமான OTT சந்தாக்களை சமர்த்தியாக, கிட்டத்தட்ட இலவசமாகவே வாங்குவதற்கு ஏர்டெல் டெலிகாம் ஆபரேட்டர் இப்போது உங்களை அனுமதிக்கிறது. ஆம், Amazon Prime மற்றும் Disney+ Hotstar சந்தாக்களை இலவசமாக வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களை Airtel கொண்டுள்ளது. இதிலிருந்து உங்களுக்கான சிறந்த திட்டத்தைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

Amazon Prime மற்றும் Disney+ Hotstar சந்தா பெற இது கட்டாயம்

Amazon Prime மற்றும் Disney+ Hotstar சந்தா பெற இது கட்டாயம்

ஆனால், இந்த Amazon Prime மற்றும் Disney+ Hotstar ஆகிய இரண்டு சந்தாவையும் நீங்கள் இலவசமாகப் பெற வேண்டும் என்றால் ஒரு நிபந்தனையை நீங்கள் கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த முக்கியமான நிபந்தனை என்னவென்றால், நீங்கள் ஒரு போஸ்ட்பெய்டு கணக்கை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆம், Amazon Prime மற்றும் Disney+ Hotstar சந்தாவை பெற நீங்கள் ஒரு ஏர்டெல் போஸ்ட்பெய்டு பயனராக இருக்க வேண்டும்.

ரூ.499 விலை முதல் பெஸ்டான ரீசார்ஜ் திட்டம்

ரூ.499 விலை முதல் பெஸ்டான ரீசார்ஜ் திட்டம்

போஸ்ட்பெய்டு பயனரா? ஐயையோ.! அப்படியானால் ரீசார்ஜ் திட்டங்களின் விலை எல்லாம் அதிகமாக இருக்குமே என்று தவறாக நினைத்துவிடாதீர்கள். நாங்கள் இங்குப் பேசும் திட்டங்கள் வெறும் ரூ.499 என்ற விலை முதல் துவங்குகிறது. சரி, எப்படி இந்த ரீசார்ஜ் திட்டங்களை வாங்கி, இலவசமாக Amazon Prime மற்றும் Disney+ Hotstar சந்தாவைப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.499 திட்டம்

ஏர்டெல் ரூ.499 திட்டம்

இந்த போஸ்ட்பெய்ட் திட்டமானது 75ஜிபி டேட்டா ரோல்ஓவரை வழங்குகிறது. அதனுடன், இது வரம்பற்ற அழைப்பு நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் தேங்க்ஸ் கூடுதல் நன்மைகள் மற்றும் Wynk பிரீமியம் போன்றவற்றை வழங்குகிறது. இத்துடன் உங்களுக்கு 6 மாத Amazon Prime மெம்பர்ஷிப் மற்றும் 1 வருடத்திற்கு Disney+ Hotstar மொபைல் சந்தா இலவசமாகக் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.999 திட்டம்

ஏர்டெல் ரூ.999 திட்டம்

இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் 100ஜிபி டேட்டா ரோல்ஓவர் நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் 2 இலவச-ஆட்-ஆன் பேமிலி நன்மையை வழங்குகிறது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையுடன், தினமும் 100 எஸ்எம்எஸ், மொபைல் புரொடெக்ஷன் மற்றும் Wynk பிரீமியம் போன்றவற்றை வழங்குகிறது. இத்துடன், Amazon Prime மெம்பர்ஷிப்பின் 6 மாத சந்தா மற்றும் Disney+ Hotstar மொபைலின் 1 வருடம் சந்தா நன்மை இலவசமாகக் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.1199 திட்டம்

ஏர்டெல் ரூ.1199 திட்டம்

இந்த திட்டம் உங்களுக்கு 150ஜிபி டேட்டா ரோல்ஓவரை வழங்குகிறது. இந்த திட்டம் 2 இலவச-ஆட்-ஆன் பேமிலி நன்மையை வழங்குகிறது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையுடன், தினமும் 100 எஸ்எம்எஸ், மொபைல் புரொடெக்ஷன் மற்றும் Wynk பிரீமியம் போன்றவற்றை வழங்குகிறது. ஆனால், இந்த திட்டம் 2 அல்ல 3 OTT சந்தாக்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Netflix அடிப்படை மாதாந்திர சந்தா, Amazon Prime சேவைக்கான 6 மாத சந்தா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் 1 வருடம் சந்தாவை ஒரே பேக்கில் வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.1599 திட்டம்

ஏர்டெல் ரூ.1599 திட்டம்

மூன்று OTT சந்தாக்களுடன் கிடைக்கும் மற்றொரு பெஸ்ட் பேக் இந்த திட்டம் தான். இது Netflix இன் அடிப்படை மாதாந்திர சந்தா, 6 மாதங்களுக்கு Amazon Prime மற்றும் 1 வருடத்திற்கு Disney+ Hotstar மொபைல் சந்தா ஆகியவற்றை வழங்குகிறது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் 250ஜிபி டேட்டா ரோல்ஓவரை வழங்குகிறது. இது 3 இலவச ஆட்-ஆன் இணைப்புகளை வழங்குகிறது. இத்துடன், இது வரம்பற்ற அழைப்பு நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ், மொபைல் புரொடெக்ஷன் மற்றும் Wynk பிரீமியம் உடன் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel offers both Disney+ Hotstar and Amazon Prime subscriptions with select postpaid plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X