ரூ.500-க்கு கீழ் பட்ஜெட் ரீசார்ஜ்: ஏர்டெல் சிறந்த திட்டங்கள்!
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதில் ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.500 கீழ் கிடைக்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.219 விலையில் தினசரி 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளை வழங்குகிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சந்தா, விங்க் மியூசிக் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
ரூ.289 விலையில் கிடைக்கும் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான அணுகல், ஜீ5 ப்ரீமியம் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், இலவச ஹலோ டியூன்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது.
ரூ.298 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, 100 எஸ்எம்எஸ் ஆகியவைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சந்தா, இலவச ஆன்லைன் படிப்புகளுக்கான அணுகல், விங்க் மியூசிக் ஆகியவைகள் வழங்கப்படுகிறது. மேலும் ஃபாஸ்ட்டேக்கில் ரூ.150 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ் உட்பட ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சந்தா, இலவச ஆன்லைன் படிப்புகளுக்கான அணுகல், விங்க் மியூசிக் ஆகியவைகள் வழங்கப்படுகிறது. மேலும் ஃபாஸ்ட்டேக்கில் ரூ.150 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ரூ.448 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒரு ஆண்டு விஐபி சந்தா, தினசரி 100 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக், ஷா அகாடமி சந்தா ஆகியவைகள் வழங்கப்படுகிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம் சந்தாவும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications