Home
News

ரூ.2000 கேஷ்பேக் உடன் அதிரடியாக ஆப்பரை வழங்கி தெறிக்கவிட்ட ஏர்டெல்.!

ஏர்டெல் நிறுவனம் ரூ.2000 கேஷ்பேக் உடன் பல்வேறு அதிரடியான ஆப்பர்களையும் அறிவித்துள்ளது. வாடிக்கையைளர்கள் கவர்ந்து இழுக்கும் வண்ணம் புதிய டேட்டா பிளானும், அதிரடியான வாய்ஸ் கால் சலுகையும் அறிவித்துள்ளது

ஏர்டெல் நிறுவனம் ரூ.2000 கேஷ்பேக் உடன் பல்வேறு அதிரடியான ஆப்பர்களையும் அறிவித்துள்ளது. வாடிக்கையைளர்கள் கவர்ந்து இழுக்கும் வண்ணம் புதிய டேட்டா பிளானும், அதிரடியான வாய்ஸ் கால் சலுகையும் அறிவித்துள்ளது.

ரூ.2000 கேஷ்பேக் உடன் அதிரடியாக ஆப்பரை வழங்கி தெறிக்கவிட்ட ஏர்டெல்.!

ஜியோ நிறுவனத்துக்கு போட்டியாக பல்வேறு திட்டங்களையும் விடாப்பிடியாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. தனது வாடிக்கையாளர்களை காத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முதலிடம் பிடித்துள்ளது ஜியோ:

முதலிடம் பிடித்துள்ளது ஜியோ:

இந்தியாவில் 4ஜியில் சேவை வழங்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் முதலிடத்தில் இருக்கின்றது. தற்போது, முதலிடத்தில் இருந்த ஏர்டெல்லையும் வீழ்த்தியுள்ளது.

மேலும், இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களுடன் வோடபோன் ஐடியா நிறுவனம் முதலிடத்தில் இருக்கின்றது. ரிலையன்ஸ் ஜியோ இன்போ காம் நிறுவனம் 2வது இடத்தில் இருந்த ஏர்டெல்லை வீழ்த்தி அந்த இடத்தை பிடித்துள்ளது.

தற்போது, ஏர்டெல் நிறுவனம் 3ம் இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து மற்ற நிறுவனங்கள் வருகின்றன.

குவியும் வாடிக்கையாளர்கள்:

குவியும் வாடிக்கையாளர்கள்:

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றது. மேலும், அதிரடியாக பல்வேறு இலவச சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்கள் குவித்து வருகின்றது. ஜியோவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மற்ற நிறுவனங்கள் திக்குமுக்காடி வருகின்றன.

ஏர்டெல் இடம் பறிபோனது:

ஏர்டெல் இடம் பறிபோனது:

ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களுடன் வோடாபோன்-ஐடியா இணைவுக்கு முன் முதலிடத்தில் இருந்தது. பிறகு இரண்டாம் இடம் பிடித்தது. இந்நிலையில், ஜியோ நிறுவனம் தனது சலுகைகள் மூலம் அதிக வாடிக்கையாளர்களை பெற்று, 2ம் இடத்தை பிடித்துள்ளது.
தற்போது, ஏர்டெல் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

புதிய ஆப்பர் வழங்கிய ஏர்டெல்:

புதிய ஆப்பர் வழங்கிய ஏர்டெல்:

இந்நிலையில் வாடிக்கையாளர்களை தற்காத்துக் கொள்ள புதிய ஆஃபரை வழங்கியுள்ளது. அதில் ரூபாய் 399-க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என்ற சலுகையை ஏற்கனவே வழங்கி வந்தது ஏர்டெல் நிறுவனம்.

சிறப்பு சலுகை:

சிறப்பு சலுகை:

ரூ. 399 பேக் மூலம் ரீசார்ஜ் செய்ய விரும்பும், ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. தற்போது இந்த ப்ளானில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 33 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த கூடுதல் டேட்டா சலுகை ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் மாறுபடும் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது.

இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் "ஏர்டெல் நன்றி ஆப்" (Airtel Thanks app) மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.2000 கேஷ்பேக் அறிவிப்பு:

ரூ.2000 கேஷ்பேக் அறிவிப்பு:

மற்றொரு ப்ளானில் ஏர்டெல் டிவி பிரீமியம் (Airtel TV Premium), விங்க் மியூசிக் (Wynk Music), ஒரு ஆண்டு இலவச நார்டன் மொபைல் செக்யூரிட்டி (Norton Mobile Security) புதிய சாதனம் ஏதேனும் வாங்கினால் ரூபாய் 2,000 வரை கேஷ்பேக் (CASHBACK) ஆகியவற்றுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel offers amazing offer with cashback of Rs.2000 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X