சத்தமின்றி கூடுதல் சலுகையை வழங்கிய Airtel.. இனி தினமும் 4ஜிபி டேட்டா.. ஓடிடி.. அன்லிமிடெட் சலுகைகள்..
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் சமீபத்தில் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிக டேட்டா நன்மைகள் மற்றும் ஓடிடி சலுகைகள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுவந்தது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவந்த ஒவ்வொரு திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே உள்ள ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகையை அறிவித்துள்ளது ஏர்டெல். அதாவது ஏர்டெல் நிறுவனம் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் கூடுதல் சலுகையை அறிவித்துள்ளது. இப்போது இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன மற்றும் வேலிடிட்டி குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 449 prepaid Plan) முன்பு தினமும் 3ஜிபி டேட்டா வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 4ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 4GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டம் அதிகமான ஓடிடி நன்மைகளை வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), எபிக் ஆன் (Epic On), சோஷியல் ஸ்வாக் (Social Swag) சந்தா, கான்ச்சா லங்கா (Kanccha Lanka) கிளிக் (Klikk), ஹங்கமா (Hungama), ஃபேன் கோட் (Fan Code), ஈராஸ் நவ் (Eros Now), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), ஹோய்சோய் (HoiChoi) போன்ற ஓடிடி ஆப்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் சன்நெக்ஸ்ட் (Sun NXT) டாகுபே (Docubay), டாலிவுட்பிளே (Dollywood Play), அல்ட்ரா (Ultra), சாவ்பால் (Chaupal), டாலிவுட்பிளே (Dollywood Play), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix) போன்ற ஓடிடி தளங்களை ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 28 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), 30ஜிபி கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.
குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிகமான ஓடிடி நன்மைகளை வழங்குகிறது, கூடவே தினமும் 4ஜிபி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். அதேபோல் ஏர்டெல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








