Home
News

சத்தமின்றி ரூ.648 ப்ரீபெய்ட் இன்டர்நேஷனல் ரோமிங் திட்டத்தில் கூடுதல் சலுகையை வழங்கிய Airtel.. விவரம் இதோ..

ஏர்டெல் (Airtel) நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் சமீபத்தில் இன்டர்நேஷனல் ரோமிங் திட்டங்களில் கூடுதல் வேலிடிட்டி மற்றும் கூடுதல் சலுகைகளை வழங்கி வந்தது ஏர்டெல் நிறுவனம்.

இந்நிலையில் ஏர்டெல் ரூ.648 ப்ரீபெய்ட் இன்டர்நேஷனல் ரோமிங் திட்டத்தைத் (Airtel Rs 648 Prepaid International Roaming Pack) திருத்தியுள்ளது. அதாவது இந்த திட்டத்தில் கூடுதல் நன்மையை வழங்கி உள்ளது ஏர்டெல் நிறுவனம். எனவே வெளி நாடு செல்லும் இந்தியர்களுக்கும், வெளிநாடு-வாழ் இந்தியர்களுக்கும் இந்த திட்டம் பயனுள்ள வகையில் இருக்கும் இப்போது ஏர்டெல் ரூ.648 ப்ரீபெய்ட் இன்டர்நேஷனல் ரோமிங் திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

சத்தமின்றி ரூ.648 ப்ரீபெய்ட் திட்டத்தில் சலுகையை வழங்கிய Airtel..

ரூ.648 ப்ரீபெய்ட் இன்டர்நேஷனல் ரோமிங் திட்டம் (Airtel Rs 648 Prepaid IR Pack) ஆனது முன்பு 500எம்பி டேட்டாவை மட்டுமே வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாள் ஆகும். எனவே இந்த ஒரு நாளில் யுஎஸ்ஏ (USA), ஐரோப்பா (Europe), ஆசியா (Asia) மற்றும் ஆப்ரிக்காவில் (Africa) இருக்கும் நாடுகளுக்கு சேவைகள் கிடைக்கும். மொத்தமாக 189 நாடுகளுக்கு சேவைகள் கிடைக்கிறது.

மேலும் ரூ.648 ப்ரீபெய்ட் இன்டர்நேஷனல் ரோமிங் திட்டத்தில் 100 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. இதில் இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் கால்கள் அடங்கும். அதேபோல இந்தியா மற்றும் லோக்கல் கால்களும் அடங்கும். அதேபோல் 10 எஸ்எம்எஸ் சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. அதேபோல் 5 நாட்கள் வேலிடிட்டி தரும் இன்டர்நேஷனல் ரோமிங் திட்டமும் ஏர்டெல் நிறுவனத்திடம் உள்ளது.

ஏர்டெல் ரூ.798 ப்ரீபெய்ட் இன்டர்நேஷனல் ரோமிங் திட்டம் (Airtel Rs 798 Prepaid IR Pack) தான் 5 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த 5 நாட்களில் யுஎஸ்ஏ (USA), ஐரோப்பா (Europe), ஆசியா (Asia) மற்றும் ஆப்ரிக்காவில் (Africa) இருக்கும் நாடுகளுக்குச் சேவைகள் கிடைக்கும். மொத்தமாக 189 நாடுகளில் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஏர்டெல் ரூ.798 ப்ரீபெய்ட் இன்டர்நேஷனல் ரோமிங் திட்டத்தில் 2ஜிபி டேட்டா மற்றும் 150 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இதில் இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் கால்கள் அடங்கும். அதேபோல இந்தியா மற்றும் லோக்கல் கால்களும் அடங்கும் என்பதைக் கவனத்தில் கொள்க.

மேலும் 20எஸ்எம்எஸ் சலுகையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.798 ப்ரீபெய்ட் இன்டர்நேஷனல் ரோமிங் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றவுடனேயே இன்டர்நேஷனல் ரோமிங் பேக் ஆக்டிவேட் செய்யப்படும். குறிப்பாக இந்த ஏர்டெல் ரூ.748 ப்ரீபெய்ட் இன்டர்நேஷனல் ரோமிங் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஏர்டெல் நிறுவனம் விரைவில் இன்னும் பல இன்டர்நேஷனல் ரோமிங் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel offers additional benefits on Rs.648 prepaid international roaming plan: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X