ஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

|

தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவை 2019 டிசம்பரில் ரீசார்ஜ் கட்டண திருத்தத்திற்குப் பிறகு பல புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. அவற்றில் சிலவற்றின் விலையை அதிகரித்துள்ளன, அத்துடன் பல கட்டணத் திட்டங்களின் விலையையும் குறைத்து நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஸ்ட்ரீமிங்கிற்கு இலவச சந்தா போன்ற கூடுதல் நன்மைகளை வழங்கியுள்ளன.

ஆறு டாக் டைம் திட்டங்கள்

ஆறு டாக் டைம் திட்டங்கள்

ஏர்டெல் இப்போது அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ரூ.10, ரூ.20, ரூ.100, ரூ.500, ரூ.1000 மற்றும் ரூ.5,000 என ஆறு டாக் டைம் திட்டங்களை கொண்டுள்ளது. இருப்பினும், மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தப் ஏர்டெல் பயனர்கள் கட்டாயம் ரூ.45 ரீசார்ஜ் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். மேலே குறிப்பிட்ட விலைகளுடன் மட்டும் ரீசார்ஜ் செய்வது உதவாது.

கட்டாயம் ரீசார்ஜ் செய்ய வேண்டும்

கட்டாயம் ரீசார்ஜ் செய்ய வேண்டும்

எடுத்துக்காட்டாக, உங்கள் எண்ணிற்கு ரூ.1000 டாக் டைம் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்திருந்தால், உங்கள் எண்ணிற்கான ரீசார்ஜ் செய்த டாக் டைம் திட்டத்தைப் பயன்படுத்த, நீங்கள் ரூ.45 உடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இருப்பினும், இந்த டாக் டைம் திட்டங்களைப் பற்றிய நல்ல விஷயம் என்னவென்றால், இவை வரம்பற்ற செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது, எனவே நீங்கள் எந்த நேரத்திலும் டாக் டைம் இருப்பைப் பயன்படுத்தலாம்.

Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்!Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்!

பாரதி ஏர்டெலின் ரூ.45 ஸ்மார்ட் ரீசார்ஜ்

பாரதி ஏர்டெலின் ரூ.45 ஸ்மார்ட் ரீசார்ஜ்

ஏர்டெல் வாடிக்கையாளர் ரூ.10 மதிப்பிலான டால்க் டைம் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பினால் கூட, வாடிக்கையாளர்கள் கட்டாயம் ரூ.45 என்கிற ஸ்மார்ட் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். பாரதி ஏர்டெலின் ரூ.45 ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டமானது எந்த விதமான டால்க் டைம் நன்மையுடனும் வழங்கப்படுவதில்லை, அதற்குப் பதிலாக, இது 28 நாட்களுக்கு ரேட் கட்டர் மற்றும் சேவை செல்லுபடியாகும் சலுகைகளை வழங்குகிறது.

டாக் டைமிற்கு வேலிடிட்டி இல்லாமையே சிறப்பு

டாக் டைமிற்கு வேலிடிட்டி இல்லாமையே சிறப்பு

இப்படியான நிலையில் ஏன் ஏர்டெல் வாடிக்கையாளர் இந்த டால்க் டைம் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய விரும்புகிறார்கள் என்று கேட்டால், அதற்கு பதில், இதன் வேலிடிட்டி இல்லாமை தான் காரணமாக இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற செல்லுபடியாகும் காலத்தை வழங்குவதால், எந்த நேரத்திலும் நீங்கள் உங்கள் இருப்பில் உள்ள பேலன்ஸை பயன்படுத்தலாம்.

48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.! பலே நாசா.!48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.! பலே நாசா.!

கூடுதல் ஸ்மார்ட் ரீசார்ஜ்களும் கிடைக்கிறது

கூடுதல் ஸ்மார்ட் ரீசார்ஜ்களும் கிடைக்கிறது

ஒவ்வொரு 28 நாட்களிலும், ஒரு ஏர்டெல் பயனர் தங்கள் கணக்கில் உள்ள டாக் டைம் இருப்பைப் பயன்படுத்த ரூ .45 ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரூ.45 ஸ்மார்ட் ரீசார்ஜ் தவிர, ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து ரூ.49 மற்றும் ரூ.79 ஸ்மார்ட் ரீசார்ஜ்களும் அணுகக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காலாவதியாகமல் பார்த்துக்கொள்ள இதை செய்யுங்கள்

காலாவதியாகமல் பார்த்துக்கொள்ள இதை செய்யுங்கள்

அதேசமயம், சேவை காலம் முடிந்த பின் பயனர்கள் தங்கள் டாக் டைம் காலாவதியான 15 நாட்களுக்குள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் அழைப்பு வசதியைப் பயன்படுத்த முடியாது.

Best Mobiles in India

English summary
Airtel Offers Access To Talk Time Plans Of Rs.47 Plan Customers Must know : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X