தினசரி டேட்டா வேண்டாமா? அப்போ ஏர்டெல்லின் bulk டேட்டா திட்டங்களை பாருங்க.!
ஏர்டெல் நிறுவனம் ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஏர்டெல் நிறுவனம் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டது. கூடிய விரைவில் இந்தியா முழுவதும் இந்நிறுவனம் 5ஜி சேவையை வழங்கும். அதேபோல் ஏர்டெல் நிறுவனத்திடம் பல்க் டேட்டா திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் தினசரி வரம்பற்ற டேட்டா நன்மைகளை வழங்குகிறது.

இன்னும் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் தினசரி 1ஜிபி, 2ஜிபி அல்லது 3ஜிபி போன்ற டேட்டா வரம்பு இல்லாமல் மொத்த டேட்டா நன்மைகளை வழங்குகிறது பல்க் டேட்டா திட்டங்கள். இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் பல்க் டேட்டா திட்டங்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 24 நாட்களுக்கு மொத்தமாக 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு 300 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், இலவச ஹெலோ டியூன்கள், வின்க் மியூசிக் சந்தா போன்ற நன்மைகள் இந்த ரூ.155 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர Hellotunes மற்றும் Wynk Music இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தின்வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர Hellotunes மற்றும் Wynk Music இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ 296 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ 296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 30 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் மொத்தமாக 25ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ 296 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்களுக்குத் தினசரி 100 எஸ்எம்எஸ் உடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. Apollo 24|7 Circle, FASTag இல் ரூ.100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music ஆகிய அணுகலும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.455 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.455 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 6ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ.100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.

ஏர்டெல் ரூ.489 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.489 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. தினசரி வரம்பு ஏதும் இல்லாமல் மொத்தமாக 50 ஜிபி டேட்டா வரவு வைக்கப்படுகிறது. கூடுதலாகப் பயனர்களுக்கு ஏர்டெல் விங்க் மியூசிக், இலவச ஹலோ ட்யூன், அப்பல்லோ 24/7 மற்றும் ஃபாஸ்ட்டேக் நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 30 நாட்கள் செல்லுபடியாகும்.
ஏர்டெல் ரூ.509 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல் ரூ.509 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது முழுமையாக 1 மாதத்திற்குச் செல்லுபடியாகும். உள்ளூர் மற்றும் எஸ்டிடி உட்பட வரம்பற்ற அழைப்பு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இதில் 300 எஸ்எம்எஸ் நன்மையும் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் மொத்தமாக 60 ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. இதுதவிர அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ.100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.


Click it and Unblock the Notifications