ஏர்டெல் அதிரடி : நாள் ஒன்றிற்கு 4ஜிபி டேட்டா; இதை ஜியோ சமாளிக்கப்போவது எப்படி.?
வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மைகளுடம் சேர்த்து நாள் ஒன்றிற்கு 4ஜிபி அளவிலான 3ஜி/4 ஜி தரவு கிடைக்கும்.
மாதம் முழுக்க 200எம்பி 2ஜி/3ஜி டேட்டாவை பயன்படுத்திய இந்திய வடிக்கையாளராகளுக்கு இப்போது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா பற்றவில்லை என்பதே நிதர்சனம். இதற்கெல்லாம் காரணமாய் திகழும் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் போட்டியிடும் முயற்சியை, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல், இன்னும் கைவிடுவதாய் தெரியவில்லை.

ஆம், மற்றொரு அதிரடியான டேட்டா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள இந்த திட்டம் நாள் ஒன்றிற்கு 4ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அதிரடி திட்டத்தை ஜியோ எப்படி சமாளிக்க போகிறது என்று பொறுத்திருந்து பாப்போம்; அதற்கு முன் எரெட்ல நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்தின் விவரங்களை பார்த்து விடுவோம்.

4ஜிபி/நாள்
தினமும் 4ஜிபி டேட்டா வழங்கும் இந்த ஏர்டெல் நிறுவனத்தின் புதிய திட்டம் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு
ரூ.999/- மதிப்புள்ள இந்த திட்டத்தை அணுகப்பெறும் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மைகளுடம் சேர்த்து நாள் ஒன்றிற்கு 4ஜிபி அளவிலான 3ஜி/4 ஜி தரவு கிடைக்கும்.

மொத்தம் 112 ஜிபி தரவு
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் சார்ந்த விவரத்தை டெலிகாம் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு மாதம் மொத்தம் 112 ஜிபி தரவு தரும் இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும்.

90 நாட்களுக்கு 90ஜிபி
இந்த திட்டத்தை அறிமுகம் செய்ததின் மூலம் ஏர்டெல் நிறுவனம், 90 நாட்களுக்கு 90ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும் ஜியோவின் ரூ.999/- எளிமையாக எதிர்கொள்கிறது என்பது வெளிப்படை.

ரூ.349, ரூ.399, ரூ.499 மற்றும் ரூ.799/-
மறுகையில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தின் மற்ற திட்டங்களான, ரூ.349, ரூ.399, ரூ.499 மற்றும் ரூ.799/- ஆகியவைகளும் நாள் ஒன்றிற்கு 1 ஜிபி வரையிலான 3 ஜிபி தரவுவாய் வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.899/- திட்டம்
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு 6ஜிபி தரவுடன் வரம்பற்ற உள்ளூர் பிளஸ் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்கும் மற்றொரு திட்டமும் உள்ளது. அந்த திட்டம் ரூ.899/- என்ற விலைக்கு வழங்கப்படுகிறது.

3.5 ஜிபி கூடுதல் டேட்டா
மேலும், 4ஜி கைபேசிகளுக்கும், 4ஜி சிம் பயனர்களுக்கு, 27 நாட்கள் செல்லுபடியாகும் நாள் ஒன்றிற்கு 3.5 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவைவும் நிறுவனம் வழங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications