தெறி தீபாவளி.. மலிவு விலையில் 3ஜிபி வழங்கும் ஏர்டெல்.!
தீபாவளி சலுகையாக ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு 3ஜிபி அளவிலான 4ஜி தரவை குறைந்த விலையில் வழங்குகிறது, அதை பெறுவது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.!
தீபாவளி திருவிழா நெருங்கிக் கொண்டே இருக்க இந்திய தொலைதொடர்பு இயக்குனர்கள் தங்களின் வாடிக்கையாளர்களை கவரும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கத் தொங்கியுள்ளனர்.
இந்த நேரத்தில் வோடபோன், ரிலையன்ஸ், ஏர்செல், மற்றும் பி.எஸ்.என்.எல் ஏற்கனவே ஒரு தவிர்க்க முடியாத சலுகைகளை அறிவித்துள்ள நிலையில் இப்போது ஏர்டெல் தனக்கே உரிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் மூலம் தனது வழக்கமான 4ஜி டேட்டா கட்டணத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ.177/- தள்ளுபடி செய்துள்ளது.

இதே வரம்பிலான டேட்டா
ஏர்டெல் நிறுவனம் மிக அமைதியாக தன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ரூ.348/-க்கு 3 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா கிடைக்கும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்னர் இதே வரம்பிலான டேட்டாவானது ரூ.465/-க்கு ஏர்டெல் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீபெய்ட்
எனினும், இந்த திட்டம் படத்தில் கட்டடப்படுவது போன்ற குறிப்பிட்ட மெசேஜ் கிடைக்கப்பெறும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வண்ணம் இருந்தது.

விளம்பர திட்டம்
அந்த வழக்கமான திட்டம் போன்றே இந்த ரூ.348/-க்கு கிடைக்கும் 4ஜி தரவு 28 நாட்கள் செல்லுபடியாகும் எனினும், இதுவொரு தீபாவளிக்கு செல்லுபடியாகும் இது ஒரு விளம்பர திட்டம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இரண்டு வழிகள்
ஏர்டெல் வழங்கும் இந்த புதிய பண்டிகை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இரண்டு வழிகள் உள்ளன ஒன்று தொலைபேசியில் இருந்து ஒரு யூஎஸ்எஸ்டி குறியீடு டயல் செய்வதின் மூலம் பெறலாம் அல்லது மைஏர்டெல் ஆப் மூலம் பெறலாம்.

டயல் செய்வதின் மூலம்
இந்த சலுகையை மேற்குறிப்பிட்டப்படி ஒரு எஸ்எம்எஸ் பெறுவதில் மூலமும் அணுக முடியும் அல்லது நீங்கள் உங்கள் ஏர்டெல் எண்ணில் இருந்து *121*1# என்ற எண்ணிற்கு டயல் செய்வதின் மூலமும் இந்த வாய்ப்பை பெற முடியும். ஆனால், இந்த விஷயத்தில் வெற்றிகரமாக ரீசார்ஜ் நிகழ்த்த உங்கள் பேலன்ஸில் போதுமான பணம் இருக்க வேண்டும்.

மை ஏர்டெல் ஆப் மூலம்
#01 மேம்படுத்தப்பட்ட மைஏர்டெல் ஆப்தனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்
#02 பின்னர் ஸ்பெஷல் ஆபரில் கிளிக் செய்ய மேலே கூறப்பட்டுள்ள பிளான் உங்களுக்கு கிடைக்கும் பின்னர் 'காட் இட்' கிளிக் செய்யவும். பின்னர் இன்னொரு பாப் அப் மெனு கிடைக்கும்
#03 பின்னர் அந்த திட்டத்தை செயல்படுத்த 'ஓகே' கிளிக் செய்யவும். பின்னர் சலுகையை அனுபவிக்கவும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க
ஏர்டெல் அதிரடி : எக்ஸ்ட்ரா டேட்டா பெறுவது எப்படி.?


Click it and Unblock the Notifications