Just In
- 40 min ago
கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய Motorola போன்: அறிமுக தேதி இதுதான்.!
- 1 hr ago
காத்திருந்தது தப்பே இல்ல.! அறிமுகமானது Samsung Galaxy S23.. விலை என்ன தெரியுமா?
- 2 hrs ago
பூமியின் மையப்பகுதி கூல் ஆகிறதா? இது ஆபத்தா? பூமியை அழிக்கக்கூடியதா? விஞ்ஞானிகள் விளக்கம்.!
- 2 hrs ago
சத்தமின்றி ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் நன்மையை வழங்கிய Airtel : என்ஜாய் செய்யும் பயனர்கள்.!
Don't Miss
- Movies
மாமியாரின் தாலியை கொண்டு கண்ணம்மாவிற்கு தாலி செய்ய சொல்லும் பாரதி.. கதையில் ட்விஸ்ட்!
- News
முகாலய தோட்டம் பெயர் மாற்றம்! அப்பட்டமான மத அடிப்படைவாத செயல்! ஜவாஹிருல்லா சாடல்!
- Finance
Adani: கிரெடிட் சூசி எடுத்த முடிவு.. FPO ரத்து செய்ய என்ன காரணம்..?
- Lifestyle
பிப்ரவரியில் நிகழும் 3 கிரக மாற்றங்களால், இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
- Automobiles
போறபோக்க பாத்தா மாருதி, டாடா எல்லாம் நம்ம ஆளு பின்னாடிதான் நிக்கணும் போலிருக்கே! தொடர் வெற்றியில் மஹிந்திரா!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
2ஜிபி இலவச டேட்டாவை வழங்கும் Airtel: எப்படி பெறுவது? இதோ முழு விவரம்.!
ஏர்டெல் நிறுவனம் ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

2ஜிபி இலவச டேட்டா
அதேபோல் மற்ற நிறுவனங்களை விட கூடுதல் டேட்டா மற்றும் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது தேர்வு செய்யப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்வதன் மூலம் 2ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம். இப்பேபது அந்த இலவச டேட்டாவை பெறுவது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்
அதாவது ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks app) பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி இலவச டேட்டா கிடைக்கும். குறிப்பாக ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்ய முடியும். குறிப்பாக பயனர்கள் இந்த ஆப் வசதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் போது 2ஜிபி இலவச டேட்டா 2ஜிபி டேட்டா கூப்பனைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீபெய்ட் திட்டங்கள்
குறிப்பாக ரூ.265, ரூ.359, ரூ.549, ரூ.699, ரூ.719 மற்றும் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் 2ஜிபி இலவச டேட்டாவை பெற முடியும். மேலும் இப்போது இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Hellotunes, Wynk Music உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.359 திட்டம்
ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் Xstream mobile app அணுகல், இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டத்தில் Xstream mobile app அணுகல், இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா இந்த திட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.719 ப்ரிபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளிட்ட பல சலுகைகள் இந்த திட்டத்தில்கிடைக்கிறது.

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரூ.839 திட்டம்
ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கிறது. இதுதவிர Wynk மியூசிக், இலவச Hellotunes, ரிவார்ட்ஸ்மினி சந்தா மற்றும் Apollo 24|7 Circle போன்ற கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470