யாரு விடுவா? கம்மி பட்ஜெட்டில் தினமும் 2.5GB டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்.. Airtel கொடுக்கும் சூப்பர் ரீசார்ஜ்..
ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அதேபோல் சமீபத்தில் கூட இந்நிறுவனம் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் பட்ஜெட் விலையில் அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா நன்மையை வழங்கி வருகிறது ஏர்டெல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது தினமும் 2.5ஜிபி டேட்டா மற்றும் அதிக நாள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 359 Recharge Plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 1 மாதம் வேலிடிட்டி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தா கிடைக்கும். இதன் கீழ் 20 OTT தளங்களுக்கான அணுகலைப் பெறமுடியும்
அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் அன்லிமிடெட் 5ஜி, அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle) சலுகை, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் போன்ற நன்மைகளைக் கொண்டுள்ளது இந்த ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில்(Airtel Rs 999 plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இதில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது.
மேலும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தா, அமேசான் பிரைம் சந்தா, RewardsMini சந்தா, உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது. இதுதவிர அன்லிமிடெட் 5ஜி, அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle) சலுகை, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் போன்ற நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெயட் திட்டத்தில் (airtel rs 3359 plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 912.5ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம்.
ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் வழங்குகிறது ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெயட் திட்டம். பின்புஅன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) மெம்பர்ஷிப் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம்.


Click it and Unblock the Notifications








