ஏர்டெல் அதிரடி : ரூ.199/-க்கு 1ஜிபி டேட்டா பிளான்; ஜியோவிற்கு கடும்போட்டி.!
ரூ.199/- தவிர்த்து கூடுதலாக, புதிய வாடிக்கையாளர்களுக்காக ரூ.178/- என்ற புதிய திட்டத்தையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
நீங்கள் ஜியோ வெறுப்பாளராக இருந்தாலும் சரி அலல்து ஒரு ஏர்டெல்வாசியாக இருந்தாலும், முதலில் முகேஷ் அம்பானிக்கு நன்றியை தெரிவித்தே ஆகவேண்டும்.

ஒருவேளை, முகேஷ் அம்பானியின் மாஸ்டர் மைண்டில் இருந்து வரம்பற்ற டேட்டாவை வழங்கும் பிளான் பிறக்கவில்லையெனில் நாம் இன்றைய தேதி வரையிலாக, 1ஜிபி அளவிலான 2ஜி அல்லது 3ஜி டேட்டவை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி கொண்டிருப்போம்.

மாஸ்டர் மூளைக்கு ஒரு பெரிய சலாம்.!
நம்மையெல்லாம் நாள் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை பல மாதங்களுக்கு பயன்படுத்த வைத்து, அதிவேக டேட்டாவிற்கு பழக்கி, அதன் விளைவாய் இதர அனைத்து டெலிகாம் துறைகளையும் மலிவுவிலை டேட்டாவை வழங்க நிர்பந்தப்படுத்திய முகேஷ் அம்பானியின் மாஸ்டர் மூளைக்கு ஒரு பெரிய சலாம்.

கிழிந்த முகமூடிகள்.!
இந்திய தொலைத்தொடர்பு துறைக்குள் ராஜாங்கம் நடத்திய பெருநிறுவனங்களின் முகமூடிகள், ஜியோவினால் கிழிக்கப்பட்டாலும் கூட ஜியோவை அப்பட்டமாக "காப்பி" அடிக்க யாரும் தயங்குவதாய் இல்லை, குறிப்பாக பார்தி ஏர்டெல்.!

காப்பி அடித்து காலம் தள்ளும் பார்தி ஏர்டெல்.!
நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, விரைவில் வோல்ட் சேவை மூலம் வரம்பற்ற இலவச அழைப்புகள், ரூ.2000/- மதிப்பிலான ஏர்டெல் 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போன் திட்டம் என ஜியோவை அபப்டியே காப்பி அடித்து காலம் தள்ளும் பார்தி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டணத் திட்டமொன்றை தற்போது அறிவித்துள்ளது.

4ஜி/ 3ஜி / 2ஜி டேட்டா.!
இன்றும், இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனம் என்ற பெயரை தக்கவைத்து கொண்டுள்ள ஏர்டெல் அதன் பயனர்களுக்கு 1ஐபி அளவிலான 4ஜி/ 3ஜி / 2ஜி டேட்டாவை ரூ.199/- என்ற சார்ஜ் திட்டத்தின் கீழ் அறிவித்துள்ளது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகளையும் வழங்குமென்பது குறிப்பிடத்தக்கது.

28 நாட்களுக்கு ஒரு செல்லுபடி.!
வெளியான டெலிகாம் டாக் அறிக்கையின்படி, இந்த புதிய ஏர்டெல் திட்டமானது ப்ரீபெய்ட் பயனர்களுக்கானது மற்றும் 28 நாட்களுக்கு ஒரு செல்லுபடி காலம் கொண்டுள்ளது. மேலும், பயனர்கள் ஒரு நாளைக்கு 300 நிமிடங்கள் மற்றும் ஒரு வாரத்திற்கு 1200 நிமிடங்கள் என்ற வரம்பில் அழைப்பு நன்மைகள் மீதான கட்டுப்பாட்டை பெறுவார்கள்.

ரூ.178/- பேக்.!
ரூ.199/- தவிர்த்து கூடுதலாக, புதிய வாடிக்கையாளர்களுக்காக ரூ.178/- என்ற புதிய திட்டத்தையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் புதிய பயனர்கள் 1ஜிபி அளவிலான 4ஜி / 3ஜி / 2ஜி டேட்டாவை, வரம்பற்ற உள்ளூர் + எஸ்டிடி அழைப்புகளுடன் பெறுவார்கள்.

முதல் மற்றும் இரண்டாவது ரீசார்ஜ்களுக்கு மட்டுமே பொருந்தும்.!
இந்த ரீஜார்ஜ் திட்டமும் 28 நாட்கள் ஒரு செல்லுபடியாகும் வண்ணம் வெளிவருகிறது. இந்த சலுகையின் மீதான நன்மைகள் முதல் மற்றும் இரண்டாவது ரீசார்ஜ்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications