ஏர்டெல் அதிரடி : ரூ.349/- ரீசார்ஜ் செய்தால் 100% பணமும் திரும்பி கிடைக்கும்.! அதெப்படி.?
அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ.50/- என்ற கணக்கில் பயனரின் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கில் பணம் சேர்க்கப்படும்.
ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.349 ரீசார்ஜ் திட்டத்தில் 100% கேஷ் பேக் சலுகை வாய்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகையை ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ரீசார்ஜ் திட்டத்தை வாங்குபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ரூ,349/- திட்டத்தை பெரும்பாலான ஏர்டெல் பயனர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு ஊக்குவிப்பு நடவடிக்கையாகும்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த ரூ.399/- திட்டத்தை போலவே இருக்கும் ரூ.349/- திட்டத்தின் 100% கேஷ் பேக் வாய்ப்புஎப்போது முடிவடையும் என்பதை ஏர்டெல் இன்னும் அறிவிக்கவில்லை.

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கில்
இந்த கேஷ் பேக் வாய்ப்பானது ஒரே ஏழு மாதங்களில் வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீத பணத்தையும் திரும்ப வழங்குகிறது. அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ.50/- என்ற கணக்கில் பயனரின் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கில் பணம் சேர்க்கப்படும்.

இதர பண பரிவர்த்தனைகளுக்காகவும்.!
ஏர்டெல் ரீசார்ஜ்களுக்கு மட்டுமில்லாது பேமண்ட்ஸ் வாங்கி சார்ந்த இதர பண பரிவர்த்தனைகளுக்காகவும் அந்த குறிப்பிட்ட தொகையை நீங்கள் பயன்படுத்தலாம்.

ப்ரீபெய்ட் பயனர்கள்
குறிப்பாக, ரீசார்ஜ் செய்த இரண்டாவது மாதத்திலிருந்து மட்டுமே ரூ.50?- என்ற கேஷ் பேக் வாய்ப்பு உங்கள் கணக்கை எட்டும். இந்த சலுகையை பெற, ப்ரீபெய்ட் பயனர்கள் மைஏர்டெல் பயன்பாட்டில் இருந்து மட்டுமே ரூ.349/- திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

1 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா
நன்மைகளை பொறுத்தமட்டில், இந்த ரூ.349/- திட்டமானது நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா என மொத்தம் 28 ஜிபி அளவிலான தரவை வழங்கும். இதனுடன் சேர்ந்து, உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு நன்மைகளையும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்.

வாரம் ஒன்றுக்கு 1000 நிமிடங்கள்
எந்தவொரு கட்டணமின்றி வாடிக்கையாளர்களுக்கு வாரம் ஒன்றுக்கு 1000 நிமிடங்கள் அழைப்பு நன்மை வழங்கப்படும் அந்த வரம்பு தீர்ந்துவிட்டால், ஏர்டெல் டூ ஏர்டெல் எண்களுக்கு இடையிலேயான அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 10 பைசாக்கள்ம ற்றும் பிற நெட்வொர்க்குகளுக்கு இடையிலேயான அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.

ஏர்டெல் மற்றும் பிற நெட்வொர்க்
இதேபோல இந்த திட்டத்தின் இலவச அழைப்புகளின் மீதான வரம்பு நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மட்டுமே என்பதும் அந்த வரம்பு முடிந்த பின்னர் நிமிடத்திற்கு 10 பைசாவும், நிமிடத்திற்கு 30 பைசாவும் முறையே ஏர்டெல் மற்றும் பிற நெட்வொர்க்குகளுக்கும் வசூலிக்கப்படும்.


Click it and Unblock the Notifications