Home
News

ரீசார்ஜ் செய்யலயா., கவலை வேணாம்: ஏர்டெல் வழங்கும் இலவச 1 ஜிபி டேட்டா!

ஏர்டெல் நிறுவனம் தங்களது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா சலுகை வழங்கும்படியான புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டம் சோதனை முறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

புதிய இலவச சலுகை

புதிய இலவச சலுகை

ஏர்டெல் நிறுவனம் தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய இலவச சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையானது ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்களுக்கானதாகும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சோதனை முறை இலவச சலுகையாகும்.

ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு

ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு

ஏர்டெல் வழங்கும் இந்த சலுகை குறித்த ஸ்க்ரீன் ஷாட்டை ஒன்லிடெக் தளம் பகிர்ந்துள்ளது. ஏர்டெல் ப்ரீபெய்ட் எண்களை ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. இது சோதனைமுறையாக செயல்பாட்டில் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

மூன்று நாட்களுக்கு இலவசம்

மூன்று நாட்களுக்கு இலவசம்

ஏர்டெல் ப்ரீபெய்ட் எண்களை ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாட்களுக்கு இலவச இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் அழைப்புகளையும் பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.

1 மாதத்திற்கு மேல் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு

1 மாதத்திற்கு மேல் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு

ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு வரம்பற்ற பேக் உடன் கணக்கை ரீசார்ஜ் செய்யும்படியான குறிப்பு இதுவாகும். ஏர்டெல் பயனர்கள் தங்களது எண்ணை ஒரு மாதத்திற்கு மேலாக ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் இந்த சலுகை கிடைப்பதாக தெரிகிறது.

இலவசமாக 1 ஜிபி டேட்டா

இலவசமாக 1 ஜிபி டேட்டா

இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது மூன்று நாட்களுக்கு இலவசமாக 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல் இந்த அறிவிப்பை குறுஞ்செய்தி மூலம் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய சலுகை அறிமுகம்

புதிய சலுகை அறிமுகம்

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்நிறுவனத்திலிருந்து விங்க் மியூசிக் ஆனது #ExpresswithHellotune எனும் ஒரு புதிய சலுகை அறிமுகம் செய்யப்பட்டது. இது பயனர்களின் தங்களின் தற்போதைய மனநிலையையும் உணர்வையும் நண்பர்களுடன் மற்றும் உறவினர்களுடனும் இசை மூலம் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.

ஏர்டெல் தேங்க்ஸ் பயனர்களுக்கு

ஏர்டெல் தேங்க்ஸ் பயனர்களுக்கு

குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தின் ஹலோ ட்யூன்ஸ் அனைத்து ஏர்டெல் தேங்க்ஸ் பயனர்களுக்கும் இலவசமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இது ஒரு சிறப்பு சலுகையாக ஏர்டெல் ஹலோ ட்யூன்களை அனைத்து நான்-ஏர்டெல் தேங்க்ஸ் பயனர்களுக்கும் 14 நாட்களுக்கு ஒருமுறை #ExpresswithHellotune இன் ஒரு பகுதியாக இருக்கச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹலோ ட்யூன் ஐகான்

ஹலோ ட்யூன் ஐகான்

இந்த ஹெலோட்டூனை அமைப்பதற்கு, பயனர்கள் விங்க் மியூசிக் ஆப் பயன்பாட்டைத் திறக்க வேண்டும், பின்பு மேல் வலதுபுறத்தில் உள்ள ஹெலோட்டூன் ஐகானைத் தேடி, மொழிகள் மற்றும் வகைகளில் இருந்து ஒரு சிறப்பான ஹெலோட்டூனைத் தேர்வு செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Airtel Offers 1 Gb High Speed Free Data and More For Selective Prepaid Plan Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X