Home
News

எல்லோருக்கும் இருக்கு: ஏர்டெல் வழங்கும் இலவச 6 ஜிபி கூப்பன்கள்- எப்படி வாங்குவது தெரியுமா?

ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சுமார் 6 ஜிபி வரை டேட்டா வழங்கும்படியான இலவச கூப்பன்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை பெருவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள்

ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள்

ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் இலவச கூப்பன்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கூப்பன்களானது ரூ.219 திட்டத்துக்கு மேல் ரீசார்ஜ் செய்யும்போது கிடைக்கிறது. இந்த திட்டங்களானது குறிப்பிட்ட முறையில் ரீசார்ஜ் செய்யும்போதே கிடைக்கிறது.

இலவச கூப்பன்கள்

இலவச கூப்பன்கள்

ஏர்டெல் அறிவித்துள்ள இலவச கூப்பன்கள் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும்போது பயனர்கள் ஒவ்வொரு வகையான திட்டத்திற்கு ஏற்ப கூப்பன்களை பெறுகிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது. அதோடு மைஏர்டெல் பயன்பாட்டின்மூலம் மை கூப்பன் பிரிவை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யும்போது மட்டுமே சலுகைகள் வழங்கப்படுகிறது.

1 ஜிபி-க்கான இரண்டு கூப்பன்கள்

1 ஜிபி-க்கான இரண்டு கூப்பன்கள்

ஏர்டெல் வழங்கும் இலவச கூப்பன்கள் குறித்து விரிவாக பார்க்கையில், ரூ.219, ரூ.249, ரூ.279, ரூ.349, ரூ.398 ஆகிய திட்டத்தை மை கூப்பன் பிரிவின் கீழ் ரீசார்ஜ் செய்தால் 1 ஜிபி-க்கான இரண்டு கூப்பன்கள் பெறலாம்.

1 ஜிபி டேட்டாவுக்கான நான்கு வவுச்சர்கள்

1 ஜிபி டேட்டாவுக்கான நான்கு வவுச்சர்கள்

அதேபோல் பயனர்கள் ரூ.399, ரூ.449 மற்றும் ரூ.558 ஆகிய திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும்போது 1 ஜிபி டேட்டாவுக்கு உண்டான நான்கு வவுச்சர்கள் பெறுவார்கள். குறிப்பாக ரூ.598 மற்றும் ரூ.698 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும்போது 1 ஜிபி டேட்டா வழங்கும் ஆறு கூப்பன்களை 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் வழங்குகிறார்கள்.

டிராய் வெளியிட்டுள்ள தகவல்

டிராய் வெளியிட்டுள்ள தகவல்

இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் மார்ச் மாத தொலைத் தொடர்பு சந்தா தரவின் அறிக்கை வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2020 இல் சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களைச் சேர்த்த பாரதி ஏர்டெல் நிறுவனம், மார்ச் மாதக் கணக்கின் படி சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை இழந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசைக்கமுடியாத வாடிக்கையாளர்கள்

அசைக்கமுடியாத வாடிக்கையாளர்கள்

இருப்பினும் ஏர்டெலுக்கு என அசைக்கமுடியாத வாடிக்கையாளர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அதன் பிரதான காரணம் ஏர்டெல் வழங்கும் அதிவேக டேட்டாவும் ஒன்று. ஜியோ அறிமுகத்திற்கு முன்பு ஏர்டெல் ஒளிபரப்பு செய்யும் விளம்பரமானது அதன் அதிவேக டேட்டாவுக்கு இணையான வேகத்தை யாரும் வழங்கவில்லை என்பதாகும்.

பிரத்யேக நன்றி திட்டம்

பிரத்யேக நன்றி திட்டம்

ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பிரத்யேக நன்றி திட்டம். அது ஏர்டெல் தேங்க்ஸ் திட்டமாகும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.

ஏர்டெல் 2ஜிபி தினசரி டேட்டா திட்டம்

ஏர்டெல் 2ஜிபி தினசரி டேட்டா திட்டம்

ஏர்டெல் 2 ஜிபி தினசரி டேட்டா வழங்கும் வகையில் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலையானது ரூ.298 மற்றும் ரூ.698 ஆகும். இந்த இரண்டு திட்டங்களில் ஒன்று 28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றொன்று 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
Airtel offering Up to 6GB free data coupons for prepaid customers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X