Home
News

Airtel யூசர்ஸ் ரெடியா.. ரூ.239 ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் 5G டேட்டா!

ஏர்டெல் (Airtel) யூசர்கள் வெறும் ரூ.239 ரீசார்ஜ் செய்தால், அந்த பிளானின் டேட்டாவை மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5G டேட்டாவையும் பெறும் வகையில் அட்டகாசமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. நீங்கள் ஏர்டெல் 4ஜி சிம் (Airtel 4G) வைத்திருந்தாலும், 5ஜி போன் மட்டும் இருந்தால் போதும், அன்லிமிடெட் 5G டேட்டாவை பெறமுடியும்.

இதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். இந்தியாவில் 5ஜி வருகைக்கு பின்பு முன்னணி டெலிகாம் (Telecom) நிறுவனமான ஏர்டெல் (Airtel) அசத்தலான ப்ரீபெய்டு (Prepaid) மற்றும் போஸ்ட்பெய்ட் (Postpaid) ரீசார்ஜ் பிளான்களை (Recharge Plans) அறிமுகப்படுத்தி வருகிறது. ஏர்டெல்லின் போட்டி நிறுவனமான, ஜியோ (Jio) நிறுவனம், முதலில் அதன் யூசர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்கியிருந்தது.

Airtel யூசர்ஸ் ரெடியா.. ரூ.239 ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் 5G டேட்டா

இதைத்தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனமும் அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்க தொடங்கியது. இந்த அன்லிமிடெட் 5G டேட்டா சில யூசர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த நிலையில், இப்போது அனைத்து ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்ட் யூசர்களுக்கும் வழங்கப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம், நாடு முழுவதும் 3,000 நகரங்களில் ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) என்னும் பெயரில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவை கிடைக்கிறது. இந்த 5ஜி சேவையில் ஜியோவுக்கு இணையாக ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில், 239 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால், அந்த பிளானின் வேலிடிட்டி முடியும் வரையில் அன்லிமிடெட் 5G டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற உங்களிடம் 5ஜி போன் இருந்தால் போதும், 5ஜி சிம் தேவையில்லை. ஆனால், இந்த சலுகை ரூ.455 மற்றும் ரூ.1,799 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களுக்கு பொருந்தாது என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அன்லிமிடெட் ஏர்டெல் 5ஜி டேட்டாவை எப்படி பெறுவது?: நீங்கள் ரூ.239-க்கு மேல் ரீசார்ஜ் செய்திருந்தால் அல்லது இனிமேல் செய்தால், உங்களால் அன்லிமிடெட் ஏர்டெல் 5ஜி டேட்டாவை பயன்படுத்திக்கொள்ள முடியும். நீங்கள் ரீசார்ஜ் செய்த பின்பு, ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்-பை (Airtel Thanks App) திறந்து, ஹோம் பேஜில் இருக்கும் கிளைம் யுவர் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Claim your unlimited 5G data) டேபை கிளிக் செய்ய வேண்டும்.

அதன்பின் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் (Terms and Conditions) பக்கம் தோன்றும். அதை படித்துவிட்டு கிளைம் நவ் (Claim Now) டேபை கிளிக் செய்ய வேண்டும். அப்போது நீங்கள் 5ஜி போன் வைத்திருக்கிறீர்களா? உங்களது பகுதியில் 5ஜி சேவை கிடைக்கிறதா? என்பது செக் செய்யப்படும்.

அவை சரியாக இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு மெசேஜ் வரும், அதில் நீங்கள் அன்லிமிடெட் ஏர்டெல் 5ஜி டேட்டாவை பெற்றுவிட்டீர்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இப்போது நீங்கள் 5ஜி சேவையை பயன்படுத்த முடியும். குறிப்பாக, இதோடு உங்கள் திட்டத்தின் டேட்டாவையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 5ஜி சேவைக்கும் அதற்கும் தொடர்பில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel offering unlimited 5G data without daily data cap, here is full details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X