Home
News

ஃப்ரீ., ஃப்ரீ., ஃப்ரீ: ஏர்டெல் வழங்கும் இலவச டேட்டா- எப்படி பெறுவது தெரியுமா?

ஏர்டெல்லின் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சில திட்டங்களில் கூடுதல் தரவை வழங்குகிறது. இந்த திட்டங்களின் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள்

மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஏர்டெல் தனது மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. முன்னதாக சில திட்டங்களில் நிறுவனம் இலவச டேட்டா கூப்பன்களை வழங்கியது. ஏர்டெல் ரூ.289, ரூ.448, மற்றும் ரூ.599 திட்டங்களில் இலவச டேட்டா கூப்பன்களை நிறுவனம் வழங்குகிறது.

ரூ.289, ரூ.448, மற்றும் ரூ.599

ரூ.289, ரூ.448, மற்றும் ரூ.599

ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள இந்த மூன்று புதிய திட்டங்களில் ஏதேனும் ஒன்றை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கூடுதல் நன்மை டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது. ஏர்டெல் ரூ.289, ரூ.448, மற்றும் ரூ.599 திட்டங்களில் நிறுவனம் அறிவித்துள்ள சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

ரூ.289 திட்டத்தில் அறிவித்துள்ள சலுகை

ரூ.289 திட்டத்தில் அறிவித்துள்ள சலுகை

ஏர்டெல் நிறுவனம் ரூ.289 திட்டத்தில் அறிவித்துள்ள சலுகைகள் குறித்து பார்க்கலாம். ரூ.289 திட்டமானது நீண்ட நாட்களாக கிடைத்து வருகிறது. இந்த திட்டம் பலரின் மாதாந்திர தேர்வாக இருக்கிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு ஜீ5 ப்ரீமியம் சந்தாவை இலவசமாக வழங்குகிறது. ஜீ5 ப்ரீமியம் சந்தா வழங்கும் திட்டம் இதுவாகும்.

28 நாட்களுக்கு செல்லுபடியாகும்

28 நாட்களுக்கு செல்லுபடியாகும்

இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் இரண்டு 1 ஜிபி டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை நிறுவனம் வழங்குகிறது.

ரூ.448 திட்டத்தின் நன்மைகள்

ரூ.448 திட்டத்தின் நன்மைகள்

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.448 திட்டத்தின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். ரூ.448 திட்டம் குறித்து பார்க்கையில் இதுபுதிய திட்டமாகும். இந்த திட்டத்தின் சிறந்த அம்சம் குறித்து பார்த்தால் இதில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒரு வருட விஐபி சந்தா அணுகலை வழங்குகிறது. ரூ.448 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் புதிய சலுகை குறித்து பார்க்கையில், இதில் இரண்டு 1 ஜிபி டேட்டா வுவச்சர்கள் கிடைக்கும்.

தினசரி 3 ஜிபி டேட்டா

தினசரி 3 ஜிபி டேட்டா

இந்த திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் நன்மைகள் குறித்து பார்க்கையில் ஒரு நாளுக்கு 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரலழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

ஏர்டெல் வழங்கும் ரூ.599 திட்டம்

ஏர்டெல் வழங்கும் ரூ.599 திட்டம்

ஏர்டெல் வழங்கும் ரூ.599 திட்டம் குறித்து பார்க்கலாம். ரூ.599 திட்டத்திலும் முந்தைய திட்டம் போன்றே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் 1 வருடத்திற்கான விஐபி சந்தாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயனர்கள் தலா 1 ஜிபி என நான்கு கூப்பன்களை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும். இதில் தினசரி 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

அன்றைய தினமே காலாவதியாகும்

அன்றைய தினமே காலாவதியாகும்

ஏர்டெல் வழங்கும் டேட்டா வவுச்சர்கள் ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதாவது ஒரு வவுச்சர்களை ஒரு நாளுக்கு பயன்படுத்தினால் அது அன்றைய தின இரவே காலாவதியாகும். மேல் உள்ள திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள், என்றாவது ஒருநாள் தினசரி டேட்டா போதுமானதாக இல்லாதபட்சத்தில் இந்த வுவச்சர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இலவசமாக தரவு வவுச்சர்கள்

இலவசமாக தரவு வவுச்சர்கள்

தரவு வவுச்சர்களை இலவசமாக வழங்கும் பிற திட்டங்கள்
குறித்து பார்க்கையில் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டங்களான ரூ. 219, ரூ. 249, ரூ. 279, ரூ. 289, ரூ. 298, ரூ. 349, ரூ .398 மற்றும் ரூ 448 ஆகியவையில் இரண்டு 1 ஜிபி தரவு வவுச்சர்கள் வழங்குகின்றன.

56 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள்

56 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள்

அதேபோல் 56 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களான ரூ .939, ரூ 449, ரூ 558 மற்றும் ரூ .599 ஆகிய திட்டங்களில் நான்கு 1 ஜிபி வவுச்சர்களை வழங்குகிறது. ரூ.598 மற்றும் ரூ.698 ஆகிய திட்டங்களில் ஆறு 1 ஜிபி வுவச்சர்களை நிறுவனம் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Offering Free Complimentary Data Vouchers For these Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X