Home
News

மீண்டும் 1 இலவசம்.. அடிச்சு தூக்கும் Airtel.. ரூ.714 மதிப்புள்ள சேவை.. 6 மாதத்திற்கு FREE.. எந்த திட்டத்தில்?

பார்தி ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கான இன்னொரு புதிய, இலவச சேவையை அறிமுகம் செய்து உள்ளது. ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு பயனர்களுக்கு (Prepaid Users) ஆப்பிள் மியூசிக்கிற்கான இலவச அணுகலை (Free Apple Music subscription) வழங்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக இது போஸ்ட்பெய்டு மற்றும் பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கு மட்டுமே அணுக கிடைத்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் தனது பயனர்களுக்கு - பிரீமியம் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் டூல் ஆன - பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ ப்ரோ சந்தாவை இலவசமாக வழங்கி ஒட்டுமொத்த டெலிகாம் சந்தையின் கவனத்தையும் ஈர்த்த சில வாரங்களுக்கு பிறகு, தற்போது ஆப்பிள் மியூசிக் சந்தாவை வழங்குகிறது.

மீண்டும் 1 இலவசம்.. அடிச்சு தூக்கும் Airtel.. ரூ.714 மதிப்புள்ள சேவை!

டெலிகாம் டால்க் வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி, சில ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பில் ஆப்பிள் மியூசிக் சலுகையை பார்க்க தொடங்கியுள்ளனர். இந்த ஆபர் குறித்த பேனரில், பயனர்கள் ஆறு மாதங்கள் வரை கூடுதல் கட்டணம் இல்லாமல் (அதாவதுஇலவசமாக) ஆப்பிள் மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையை அனுபவிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

6 மாதங்கள் என்கிற இலவச காலம் முடிந்ததும், ஆப்பிள் மியூசிக் சந்தாவானது மாதத்திற்கு ரூ.119 என்கிற கட்டணத்தை கீழ் அப்டேட் செய்யப்படும். ஆக ரூ.119 x 6 மாதங்கள் = ரூ.714 மதிப்பிலான சேவையை ஏர்டெல் இலவசமாக வழங்குகிறது. ஆனால் ஏர்டெல் நிறுவனம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. எனவே இந்த இலவச சலுகைக்கான தகுதிகள் பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை.

இருப்பினும் ஆர்வமுள்ள ஏர்டெல் பயனர்கள், தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பில் உள்ள தங்களுடைய அக்கவுண்ட் வழியாக இந்த இலவச நன்மை தங்களுக்கு கிடைக்கிறதா என்பதை சரிபார்க்கலாம். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஏர்டெல்லின் அன்லிமிடெட் 5ஜி திட்டத்தில் கூட இந்த சலுகை காணப்படுகிறது.

கடந்த ஆண்டு, ஆப்பிள் டிவி பிளஸ் மற்றும் ஆப்பிள் மியூசிக் சந்தாக்களை அதன் பயனர்களுக்கு வழங்க ஏர்டெல் நிறுவனம் ஆனது ஆப்பிள் நிறுவனம் உடனான ஒரு கூட்டணியை அறிவித்தது. முன்னரே குறிப்பிட்டபடி ஆரம்பத்தில் இது (பிப்ரவரி 2025 இல்) பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது ப்ரீபெய்ட் தளத்திற்கும் விரிவடைந்து வருவதாக தெரிகிறது.

இலவச ஆப்பிள் மியூசிக் சந்தாவுடன் சேர்த்து ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.361 டேட்டா பேக்கின் வேலிடிட்டியிலும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் இந்த பேக்கின் நன்மைகளை பலமுறை மாற்றியுள்ளது. தற்போது இந்த திட்டத்தின் செல்லுபடி ஆனது 30 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்பு இந்த பேக் 30 நாட்களுக்கு 50 ஜிபி டேட்டாவை வழங்கியது. இப்போது ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதே 50 ஜிபி டேட்டா என்கிற நன்மையை 90 நாட்களுக்கு பெறுவார்கள். இது டேட்டா பயன்பாட்டில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. மேலும் குறிப்பிட்ட டேட்டா ஒதுக்கீடு தீர்ந்த பிறகு, அதாவது 50 ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு, ஒரு எம்பி டேட்டாவிற்கு ரூ.0.50 வசூலிக்கப்படும்.

முன்னரே குறிப்பிட்டபடி, கடந்த ஜூலை 2025 இல், ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கான இலவச பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ ப்ரோ சந்தாவை அறிவித்து இருந்தது. வருடத்திற்கு கிட்டத்தட்ட ரூ.17,000 மதிப்புள்ள இந்த பிரீமியம் ஏஐ பிளான் ஆனது மேம்பட்ட ஏஐ மாடல்கள், ஃபைல் அப்லோட்கள், இமேஜ் ஜெனரேஷன் மற்றும் பிற டூல்களுக்கான அணுகலை வழங்குகிறது.

வெறுமனே ஒரு இலவச இணைப்பை சேர்க்காமல் பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ ப்ரோ சந்தா வழியாக, ஏர்டெல் நிறுவனம் வெறும் பொழுதுபோக்குகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், உற்பத்தித்திறன் மற்றும் அடுத்த தலைமுறை டிஜிட்டல் சேவைகளை அதன் சந்தாதாரர்களுக்கு கொண்டு வருவதை உறுதி செய்கிறது; உண்மையிலேயே இதுவொரு பாராட்டுக்குரிய முயற்சி ஆகும்.

இதேபோல ஆப்பிள் மியூசிக் இலவச சந்தா சலுகையும் இன்னும் பரவலாக வெளிவந்தால், இலவசமாக கிடைக்கும் அல்லது விளம்பரங்களை உள்ளடக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களை நம்பியிருக்கும் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு இது ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக இருக்கலாம். மேலும் ஆப்பிள் மியூசிக்கின் ஆறு மாத கால இலவச சோதனை ஆனது பலரையும் சேவையை ஆராய ஊக்குவிக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel offering free access to Apple Music its prepaid users for 6 months Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X