ஏர்டெல் சொல்வதை செய்தால் 30ஜிபி இலவச 4ஜி டேட்டா கிடைக்கும்.? ரெடியா.?

ஜியோவை தொடர்நது இப்போது, பார்தி ​​ஏர்டெல் நிறுவனமும் இந்தியாவில் அதன் வோல்ட் (VoLTE) தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தும் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.

|

வாய்ஸ் ஓவர் லாங் டெர்ம் எவல்யூஷன் (Voice over Long-Term Evolution) எனப்படும் வோல்ட் (VoLTE) குரல் சேவையை, இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான்.

ஏர்டெல் சொல்வதை செய்தால் 30ஜிபி இலவச 4ஜி டேட்டா கிடைக்கும்.? ரெடியா.?

ஒரு வழக்கமான குரல் அழைப்பு 2ஜி / 3ஜி பிணையத்தைப் பயன்படுத்துகிறது. ஆனால் ஒரு வோல்ட் அழைப்பானது 4ஜி நெட்வொர்க்கை அடிப்படையாகக் கொண்டது. இதன் விளைவாக அதிக தெளிவு மற்றும் ஒலியை வழங்குவதோடு சேர்த்து, சாதனங்களுக்கு இடையேயான தொடர்பு (கனெக்டிவிட்டி) நேரமும் குறைகிறது.

30ஜிபி அளவிலான இலவச டேட்டா.!

30ஜிபி அளவிலான இலவச டேட்டா.!

ஜியோவை தொடர்நது இப்போது, பார்தி ​​ஏர்டெல் நிறுவனமும் இந்தியாவில் அதன் வோல்ட் (VoLTE) தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தும் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஏர்டெல் நிறுவனம் அதன் பயனர்களை, பீட்டா சோதனையில் பங்கு பெற ஊக்குவிக்கும் வானம், 30 ஜிபி அளவிலான இலவச 4ஜி டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

வோல்ட் அழைப்பில் அப்படியென்ன சிறப்பு.?

வோல்ட் அழைப்பில் அப்படியென்ன சிறப்பு.?

நிறுவனத்தின்படி, வோல்ட் எச்டி குரல் அழைப்புகளானது, வழக்கமான அழைப்புகளை விட 3 மடங்கு அதிக வேகமான அழைப்பு இணைப்பு மற்றும் பல்பணிகளை நிகழ்த்தும். மேலும், பயனர்களின் இணைய இணைப்பு துண்டிக்காமலேயே ஒரு குரல் அழைப்பு செய்ய பயனர்களுக்கு உதவும்.

ஏர்டெல் வோல்ட் பீட்டா டெஸ்ட்டில் பங்கேற்பது எப்படி.?

ஏர்டெல் வோல்ட் பீட்டா டெஸ்ட்டில் பங்கேற்பது எப்படி.?

இந்த பீட்டா சோதனையை நிகழ்த்துவதற்கு, ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி சிம் அட்டையை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள முதல் சிம் ஸ்லாட்டில் இடமளிக்க வேண்டும். 4 ஜி இயக்கிய ஏர்டெல் சிம் கார்டை முதல் ஸ்லாட்டில் வைக்க வேண்டும். பின்னற்ர் ஸ்மார்ட்போனில் உள்ள வோல்ட் விருப்பத்தை ஆன் செய்ய வேண்டும்.

4வது மற்றும் 8 வது வாரத்தில்.!

4வது மற்றும் 8 வது வாரத்தில்.!

இதை நிகழ்த்தவும் முதலில் 10ஜிபி அளவிலான 4ஜிபி டேட்டா கிடைக்கும். பின்னர் கூடுதல் 20 ஜிபி அளவிலான டேட்டாவானது 4 மற்றும் 8 வது வாரத்தில் உங்களின் கருத்துக்களை வழங்கியதற்கு பின்னர் வரவு வைக்கப்படும். இலவச டேட்டா கிடைக்கும் மறுகையில், ஒரு பீட்டா சோதனையாளர் சில நெட்வொர்க் முறைகேடுகளை சந்திக்க நேரிடும். அது சார்ந்த விவரங்களையும் நீங்கள் ஏர்டெல் உடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் எண்ணின் தகுதியை, நொடியில் சரி பார்க்கலாம்.!

உங்கள் எண்ணின் தகுதியை, நொடியில் சரி பார்க்கலாம்.!

எல்லா ஏர்டெல் சந்தாதாரர்களாலும், இந்த பீட்டா சோதனையில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. நீங்களொரு தகுதியான பீட்டா சோதனையாளராக இருக்க, அதாவது சமீபத்திய மென்பொருள் மேம்படுத்தல் மற்றும் ஒரு 4ஜி இயக்கப்பட்ட ஏர்டெல் சிம் கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் கொண்டிருக்க வேண்டும். உடன் ஏர்டெல் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று (இங்கே சொடுக்கவும்), உங்கள் தகுதியைச் சரிபார்க்க உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும். அது உங்களுக்ளின் மொபைல் எண்ணிற்கான தகுதியை சரிபார்த்து, நொடியில் முடிவுகளை வழங்கும்.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
எங்கெல்லாம் ஏர்டெல் வோல்ட் சேவை கிடைக்கிறது.?

எங்கெல்லாம் ஏர்டெல் வோல்ட் சேவை கிடைக்கிறது.?

கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில், ஏர்டெல் வோல்ட் சேவை ஏற்கனவே அறிமுகமாகிவிட்டதும். அதேபோல், மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், கேரளா, பீகார், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பீட்டா சோதனை நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel Offering Free 30GB 4G Data To VoLTE Beta Testers. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X