ஏர்டெல்லுக்கு தாராள மனசு.. Netflix.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ்கால்.. எந்த திட்டம்? என்ன விலை?
சமீபத்தில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கஸ்டமர்களுக்கு உதவும் வகையில் 3 நாட்களுக்கு இலவச சேவையை வழங்கியது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக முதலில் ஏர்டெல் நிறுவனம் தான் இதுபோன்ற சலுகையை அறிவித்தது. அதுவும் 1 ஜிபி இலவச டேட்டா (1GB Free Data) மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு கொடுத்தது.
ஆனாலும் ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தியதால் பல்வேறு மக்கள் பிஎஸ்என்எல் சிம் வாங்கத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக முன்பு இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் நெட்பிளிக்ஸ் சந்தா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்திருந்தது. ஆனால் தற்போது நெட்பிளிக்ஸ் சந்தா வழங்கும் திட்டத்தின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சரி இப்போது ஏர்டெல் நிறுவனம் நெட்பிளிக்ஸ் சந்தா வழங்கும் திட்டத்தைப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1798 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (airtel rs 1798 prepaid recharge plan) தான் பேஸிக் நெட்பிளிக்ஸ் சந்தா வழங்குகிறது. எனவே இந்த திட்டம் மூலம் பயனர்கள் புதிய திரைப்படங்களைப் பார்க்க முடியும். மேலும் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.1798 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ், அஅன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.1798 திட்டம்.

ஏர்டெல் ரூ.1798 திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தினமும் 3ஜிபி டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டி, நெட்பிளிக்ஸ் சந்தா வழங்குவதால் இந்த ஏர்டெல் ரூ.1798 திட்டத்தில் பயனர்கள் நம்பி ரீசார்ஜ் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இணையதளம் அல்லது ஆப் மூலம் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய முடியும்.
அதேபோல் நெட்பிளிக்ஸ் சந்தா வேண்டாம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) வேண்டும் என எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 549 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசர்ஜ் செய்வது நல்லது. இப்போது ஏர்டெல் 549 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல்ரூ 549 ப்ரீபெய்ட் திட்டத்தில் (airtel rs 549 prepaid recharge plan) ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும்.
இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம்.


Click it and Unblock the Notifications








